முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவருமான மஹிந்த சமரசிங்க தேசியப் பட்டியல் மூலம் விரைவில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஊடாக அவரை நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்குவதற்கு அக்கட்சியின் உயர்பீடம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்..
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும், தற்போதைய நிதியமைச்சின் செயலாளருமான கலாநிதி ஹர்ஷண பதவி விலகியதன் மூலம் ஏற்பட்ட தேசியப்பட்டியல் வெற்றிடத்துக்கே மஹிந்த சமரசிங்க நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்கள் மீது அமெரிக்கா விதித்த 44வீத தீர்வை வரியை 30 வீதமாகவும் பின்னர் 20வீதமாகவும் குறைத்துக் கொள்வதில் மஹிந்த சமரசிங்க வழங்கிய பங்களிப்பின் காரணமாகவே அவரை தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் அழைத்து வர தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட பின்னர் அவருக்கு முக்கிய அமைச்சுப் பதவியொன்றும் வழங்கப்படவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.