முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பெரும் வருவாய் இழப்பு

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) ரூ.631,177,650 பெரும் பயிற்சி வருவாயை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டு வேலைக்காக முதன்முறையாக வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்கு கட்டாய குடியிருப்பு பயிற்சி வழங்கத் தவறியதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த விடயம் பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவில் (COPE) தெரியவந்துள்ளது.

வீட்டுப் பணியாளர்கள் 

இந்தநிலையில், பயிற்சி இல்லாமல் 28,165 வீட்டுப் பணியாளர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பெரும் வருவாய் இழப்பு | Income Of Sri Lanka Bureau Of Foreign Employment

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தற்போதைய செயல்திறன் குறித்த கோப் குழு கூட்டத்தில் இந்த விடயங்கள் தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, மே 2023 முதல் ஜூன் 2024 வரை 83 சிறுவர்கள் வீட்டு சேவைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்ற ஒரு தீவிரமான உண்மை இதன்போது வெளிப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேலைவாய்பு

இதனுடன், வேலைவாய்பு விவகாரம் அதன் ஒழுங்குமுறைப் பாத்திரத்திற்கு வெளியே வணிக ரீதியாக செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பெரும் வருவாய் இழப்பு | Income Of Sri Lanka Bureau Of Foreign Employment

முந்தைய அரசாங்கத்தின் போது செயல்படுத்தப்பட்ட “ஜெயகமு இலங்கை” திட்டத்திற்காக 12 பில்லியன் செலவு செய்யப்பட்டதாக வெளிப்படுத்தப்பட்ட உண்மைகள் குறித்தும் கோப் குழு கவனம் செலுத்தியுள்ளது.

இந்த சூழ்நிலைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு, கோப் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த சமரவீர, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்த சிறப்பு துணைக் குழுவை நியமிக்க பரிந்துரைத்தமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 19 ஆம் நாள் திருவிழா

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்