முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளிநொச்சியில் வாள்வெட்டு குழு அட்டகாசம்

கிளிநொச்சி – பளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட சோறன்பற்று பகுதியில் வீடு ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று (13.08.2025) இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் அமைந்துள்ள பொன்னம்பலம் – சுதாகரன் என்னும் குடும்பஸ்தரின் வீட்டிற்குள் நேற்று (13) இரவு 08.30 மணியளவில் இனம் தெரியாத நபர்கள் உள்நுழைந்துள்ளனர்.

மேலதிக விசாரணை

முகத்தை மூடி மறைத்து கத்தி, வாள்கள், பெற்றோல் குண்டுகள் ஆகியவற்றுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு நபர்கள் வீட்டிற்குள் தாக்குதலை மேற்கொள்வதற்காக அத்துமீறி நுழைந்து உடமைகளை மோசமாக தாக்கி சேதம்
விளைவித்ததுடன் தீயிட்டு எரித்துள்ளனர்.

கிளிநொச்சியில் வாள்வெட்டு குழு அட்டகாசம் | Sword Cutting Spree In The Palai Soranpattu Area

இதில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள், கதவுகள், கண்ணாடிகள், குளிர்சாதனப்பெட்டி, அலுமாரிகள், ஏனைய பெறுமதியான ஆவணங்களுடன் பெறுமதியான வீட்டு உபகரணங்களும் சேதமடைந்துள்ளன.

வீட்டில் இருந்தவர்கள் அபயக் குரல் எழுப்ப தொடங்கியதும் தாக்குதலை மேற்கொண்ட நபர்கள் பெற்றோல் போத்தலையும் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பளை காவல்நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டதன் பிரகாரம் பளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

GalleryGalleryGalleryGalleryGallery

நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்