முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கதவடைப்பு இல்லை – சுமந்திரனுக்கு சாட்டையடி கொடுத்த வவுனியா வர்த்தகர் சங்கம்

இலங்கை தமிழரசுக்கட்சியால் (ITAK) எதிர்வரும் திங்கள்கிழமை அழைப்பு
விடுக்கப்பட்டுள்ள கதவடைப்புக்கு ஆதரவு வழங்க முடியாதென வவுனியா வர்த்தகர்
சங்கத்தின் நிர்வாகசபை தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் கே.கிருஸ்ணமூர்த்தி
தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ பிரச்சன்னம் மற்றும் முல்லைத்தீவு முத்தையன்கட்டில் இடம்பெற்ற சம்பவங்களிற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு
தழுவிய ரீதியில் எதிர்வரும் திங்கட்கிழமை கர்த்தால் ஒன்றை மேற்கொள்வதற்கு
இலங்கை தமிழரசுகட்சியின் செயலாளர் எம்.எ.சுமந்திரனால் அழைப்பு
விடுக்கப்பட்டிருந்தது.

வியாபார நிலையங்களை திறக்க வேண்டும்

குறித்த கதவடைப்புக்கு வவுனியா மாவட்ட வர்த்தகர் சங்கம் தமது ஆதரவினை
வழங்கவேண்டும் என வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகளுடன் தமிழரசுக்கட்சியின்
செயலாளர் எம்.எ.சுமந்திரன் இருதினங்களுக்கு முன்பாக நேரடியாக சந்தித்து ஆதரவை
கோரியிருந்தார்.

கதவடைப்பு இல்லை - சுமந்திரனுக்கு சாட்டையடி கொடுத்த வவுனியா வர்த்தகர் சங்கம் | Itak Calls For Hartal In North And East

இந்நிலையில் இது தொடர்பாக ஆராய்வதற்காக வவுனியா வர்த்தக சங்கத்தின்
நிர்வாகசபை இன்று கூடியது.

இதன்போது அநேகமான நிர்வாகசபை உறுப்பினர்கள்
அன்றையதினம் வியாபார நிலையங்களை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை
முன்வைத்துள்ளனர்.

இதனையடுத்து எதிர்வரும் திங்கள்கிழமை வியாபார செயற்பாடுகள் வழமை போன்று
நடைபெறும் என்றும் வவுனியா வர்த்தகர் சங்கம் கதவடைப்புக்கு ஆதரவு வழங்குவதில்லை
என்ற தீர்மானத்தை எடுத்துள்ளதாக அதன் தலைவர் கிருஸ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்