இலங்கையில் சில வெளிநாட்டு அமைப்புகளின் உதவியுடன் திட்டமிடப்பட்டு ஓரினச்சேர்க்கை பரப்பப்படுவதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சமீபத்திய ஆபத்தான சூழ்நிலை குறித்து எச்சரிக்கை விடுக்க நினைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“சில வெளிநாட்டு அமைப்புகளின் உதவியுடன் இலங்கையில் ஓரினச்சேர்க்கையாளர் உரிமைத் திட்டங்கள் தொடர்ச்சியாக விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன.
திட்டத்திற்கு உடந்தை
அந்த அமைப்புகளுக்கு இலங்கை இளைஞர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பிரசாரம் தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருமண கலாசாரத்தை அழிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் இரகசியமாக செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

சில அரசியல் கட்சிகளும் அரசியல் தலைவர்களும் இந்தத் திட்டத்திற்கு உடந்தை என எனக்குத் தெரியும்.

இந்த நிலைமை நமது நாட்டின் எதிர்காலத்திற்கும், நாம் மிகவும் மதிக்கும் பௌத்த ஒழுங்கிற்கும் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

