2025 ஜூலை மாதத்தில் இலங்கை சுங்கத் திணைக்களம், தனது அதிகபட்ச மாதாந்த
வருமானத்தை வசூலித்துள்ளது.
235 பில்லியன் ரூபாயை வசூலித்ததன் மூலம், இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக
வருமானத்தை திணைக்களம் பதிவு செய்ததாக, அதன் பணிப்பாளர் சுனில் நோனிஸ்
தெரிவித்துள்ளார்.
100 பில்லியன் ரூபாயை
2023 ஆம் ஆண்டில், திணைக்களம் ஒரு மாதத்தில் 100 பில்லியன் ரூபாயை வருமானத்தை
தாண்டியிருந்தமை சாதனையாக கருதப்பட்டது.
இந்தநிலையில்; வாகன இறக்குமதியே வருமானத்தின் பெரும் பகுதியைக் கொண்டிருந்தது
என்றும் சுங்கப்பணிப்பாளர் சுனில் நோனிஸ் தெரிவித்துள்ளார்.