முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாணய நிதியத்தின் நிபந்தனைகளை புறக்கணிக்கும் அரச நிறுவனங்கள்

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை சில அரச நிறுவனங்கள் நிறைவேற்றவில்லை என்று திறைசேரி சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தநிலையில், 200 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள கொள்முதல் ஒப்பந்த விபரங்களை அரசாங்க கொள்முதல் தளத்தில் வெளியிட வேண்டும் என்ற நிதியத்தின் நிபந்தனை நிறைவேற்றப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய காலங்களில் இந்த விடயம் குறித்து பலமுறை சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்ட போதிலும், சில அரச நிறுவனங்கள் சரியான நேரத்தில் மற்றும் நிலையான முறையில் அதனை நிறைவேற்றவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

பொது கொள்முதல் 

குறித்த விடயத்தை திறைசேரியின் செயலாளர் ஹர்சன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.

நாணய நிதியத்தின் நிபந்தனைகளை புறக்கணிக்கும் அரச நிறுவனங்கள் | Government Agencies Reject Treasury S Conditions

எனவே இதுபோன்ற தொடர்ச்சியான இணக்கமின்மை பொது கொள்முதலில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லாட்சியை மேம்படுத்துவதற்கான தேசிய முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிதி வசதி 

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கையால் வழங்கப்பட்ட உறுதிமொழிகளின் ஒரு பகுதியாக, அத்தகைய விபரங்களை வெளியிட அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது.

நாணய நிதியத்தின் நிபந்தனைகளை புறக்கணிக்கும் அரச நிறுவனங்கள் | Government Agencies Reject Treasury S Conditions

இதன் காரணமாக, தொடர்புடைய சுற்றறிக்கைகளுக்கு இணங்க செயற்படுமாறு அவர் அரச நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்