இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் விடுக்கப்பட்ட கதவடைப்புக்கு இணங்கி மட்டக்களப்பு
மாவட்டம் – களுவாஞ்சிகுடி நகர்ப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள்
மூடப்பட்டுள்ளன.
அந்தவகையில் களுவாஞ்சிகுடி பொதுச்சந்தைத் தொகுதி மற்றும் பிரதான வீதியை அண்டியுள்ள வர்த்தக நிலையங்கள், என்பன
பூட்டப்பட்டுள்ளன.
வழமை போன்று..
எனினும் உணவகங்கள், மருந்தகங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், வங்கிகள்,
பாடசாலைகள், அரச அலுவலகங்கள் என்பன வழமை போன்று இயங்கி வருகின்றன.

அத்தோடு,
கிராமங்களிலுள்ள உள்ளுர் வர்த்தக நிலையங்களும் வழமை போன்று செயற்பட்டு வருவதை
அவதானிக்க முடிகின்றது.
மக்கள் தமது அன்றாட செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதையும், போக்குவரத்துக்கள்
இடம்பெற்று வருவதையும் காணமுடிகின்றது என எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

