முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திருகோணமலையில் கதவடைப்பு முன்னெடுப்பு

தம்பலகாமம்

திருகோணமலை- தம்பலகாமம் பகுதியிலும் இன்று (18) கதவடைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

இந்தநிலையில், தம்பலகாமம் பகுதியில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டும்
ஒரு சில கடைகள் திறக்கப்பட்டிருப்பதனை அவதானிக்க முடிந்தது.

கதவடைப்பு போராட்டம்

இதன் போது
மக்களின் நடமாட்டமும் குறைந்து வீதி வெறிச்சோடி காணப்பட்டது.

திருகோணமலையில் கதவடைப்பு முன்னெடுப்பு | Door Close Protest Trinco

வடக்கு, கிழக்கில்
பூரணமான கதவடைப்பு அனுஷ்டிப்பு இன்று இடம்பெற்ற நிலையில் தம்பலகாமம்
வர்த்தகர்களும் ஆதரவை வழங்கியுள்ளனர்.

திருகோணமலை

வடகிழக்கில் இராணுவ பிரசன்னத்திற்கு எதிராகவும் முல்லைத்தீவு இளைஞனின்
உயிரிழப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திருகோணமலை நகர் பகுதியிலும்
இன்று (18) கதவடைப்பு அனுஷ்டிக்கப்பட்டது.

திருகோணமலை நகர் பகுதியில் வழமை போன்று பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டும்
ஒரு சில கடைகள் மூடப்பட்டதையும் அவதானிக்க முடிந்தது.

திருகோணமலை பிரதான
சந்தையும் திறக்கப்பட்டுள்ள நிலையில் வியாபார நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.

பூரணமான கதவடைப்பு

இதன் போது மக்களின் நடமாட்டமும் காணப்படுகிறதுடன் பொது போக்குவரத்து சேவை வழமை
போன்று இடம் பெறுகின்றது.

வடகிழக்கில் பூரணமான கதவடைப்பு அனுஷ்டிப்பு இன்று
இடம் பெற்ற நிலையில் இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் திருகோணமலை நகர்
பகுதியில் உள்ள அரச திணைக்களங்கள் மற்றும் அரச பாடசாலைகளும் இயங்கி வருகின்றது.

திருகோணமலையில் கதவடைப்பு முன்னெடுப்பு | Door Close Protest Trinco

குறிப்பாக கிண்ணியா பகுதியில் முழுமையாக கடை திறக்கப்பட்டு வியாபார
நடவடிக்கைகள் வழமையாக இடம் பெறுகின்றன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கதவடைப்புக்கு ஆதரவு என செய்தி வெளி வந்த
நிலையிலும் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் எதிர்ப்பு நடவடிக்கைக்காக துண்டு பிரசுர
விநியோகத்தை நேற்று திருகோணமலை நகர் பகுதியில் குறித்த சபையின் தவிசாளர்
குழுவுடன் இணைந்து ஈடுபட்டிருந்தார்.

ஆனாலும் முஸ்லிம் வர்த்தகர்கள் இந்தக் கடையடைப்புக்கு ஆதரவு வழங்கவில்லை என்பதை இன்றைய நடவடிக்கைகள் எடுத்து
காட்டுகின்றன.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.