முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முல்லைத்தீவில் கடையடைப்பிற்கு முழுமையான ஆதரவு இல்லை

வடக்கு கிழக்கில் அதிகரித்த இராணுவ பிரசன்னத்தை குறைக்கும் முகமாக இன்றைய தினம் வடக்கு கிழக்கு தழுவிய கடையடைப்பிற்கு இலங்கை தமிழரசுக்கட்சி அழைப்பு விடுத்திருந்தது.

வழமையாக கடையடைப்பு அனுஷ்டிக்கப்படும்போது முற்றுமுழுதாக முடங்கி காணப்படுகின்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்றைய தினம் (18) அவ்வாறான ஒரு நிலைமையை காண முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு கட்சி சார்பாக அழைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற
காரணங்களாலும் இன்னும் சில இடங்களில் தங்களுக்கு உரிய வகையில்
அறிவிக்கப்படவில்லை என்ற காரணத்தினாலும் ஆளும் அரசாங்கத்தின் மாறுபட்ட
கருத்துக்கள் மற்றும் இந்த முத்துஐயன்கட்டு இளைஞனுடைய கொலை சம்பவம் தொடர்பான
மாறுபட்ட கருத்துக்கள் இவ்வாறான குழப்ப நிலைகளுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

பகுதியளவிலான ஆதரவு

எனினும் கடையடைப்பிற்கு ஆதரவாக முல்லைத்தீவு மாவட்டத்தின்
பல்வேறு நகரங்களிலும் பல்வேறு வர்த்தகநிலையங்கள் சந்தைகள் பூட்டப்பட்டு ஆதரவு
வழங்கப்பட்டதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

இதேவேளை கடையடைப்பிற்கு ஆதரவாக முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து
உரிமையாளர் சங்கம் தங்களுடைய போக்குவரத்து பணிகளை முற்றாக நிறுத்தி ஆதரவு
வழங்கியது.

முல்லைத்தீவில் கடையடைப்பிற்கு முழுமையான ஆதரவு இல்லை | No Complete Support For Shop Closure In Mullaitivu

முல்லைத்தீவு மாவட்டத்தை பொறுத்தளவில் முல்லைத்தீவு நகரத்திலே அதிகளவான
வர்த்தக நிலையங்கள் சந்தை பூட்டப்பட்டு இருக்கின்ற நிலையில் முள்ளியவளை தண்ணீர்
ஊற்று பகுதிகளிலும் அதிகமான வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு இருப்பதை
காணக்கூடியதாக இருந்தது.

புதுக்குடியிருப்பு நகரத்தை பொறுத்த அளவிலே வழமை
போன்று செயற்பாடுகள் இடம்பெறுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டு விசுவமடு பகுதிகளிலும்
வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு ஆதரவு வழங்கப்படுவதோடு மாங்குளம் மல்லாவி
ஒட்டுசுட்டான் நகர் பகுதிகளில் ஓரளவு வர்த்தக நிலையங்கள் வழமை போன்று இயங்கி
வருகின்ற நிலமையும் காணப்படுகிறது.

அரச வங்கிகள், அரச நிறுவனங்கள் அனைத்தும் வழமை போன்று இயங்கியமை
குறிப்பிடத்தக்கது.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.