முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பில் கடத்தப்பட்ட 11 இளைஞர்கள் நிலத்தடி முகாமில்! உலுகேதென்ன மறைத்த இரகசியம்

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன, கொழும்பில் கடத்தப்பட்டு கடத்தப்பட்ட 11 இளைஞர்களையும் திருகோணமலை நிலத்தடி முகாமில் இருந்ததை பார்வையிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை சட்டத்தரணி அச்சலா செனவிரத்தின தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் பல காலம் சம்பவத்தை அறிந்து மறைத்துள்ளார் எனவும் கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இந்த முறைப்பாட்டில் அன்றிருந்த கடற்படைத் தளபதி 11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் மேலே வராதப்படி செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார்.

வழக்கை ஸ்தம்பிக்க முயற்சி

அத்தோடு முன்னாள் கடற்படை தளபதி ரவீந்திர விஜேயகுணரத்தின சாட்சிகளை மறைக்க உதவி செய்தாக குற்றம்சாட்டப்படுகிறார்.

வழக்கு விசாரணையின் போது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பிரசாத் சந்தன எட்டியாரச்சியை வெளிநாடு அனுப்புவதற்கு பண உதவி செய்துள்ளதோடு அவரை கடற்படை தளபதி இருந்த அறையின் பக்கத்தில் தங்க வைத்துள்ளார்.

கொழும்பில் கடத்தப்பட்ட 11 இளைஞர்கள் நிலத்தடி முகாமில்! உலுகேதென்ன மறைத்த இரகசியம் | 11 Youths Abducted Colombo Held Underground Camp

மேலும் குறித்த நபரின் மனைவியும் வந்து பார்வையிட்டு சென்றுள்ளார். இவ்வாறு இரண்டு வருடம் சாட்சியை வைத்திருந்து இந்த வழக்கை ஸ்தம்பிக்க முயற்சியெடுத்துள்ளார்.

குறித்த காரணங்களை சாட்சியுடன் நான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து ரவீந்திர விஜேயகுணரத்தின கைது செய்யப்படவிருந்த சந்தர்ப்பத்தில் அப்போதிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை தடுத்துள்ளார்.

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன கடற்படை புலனாய்வு பிரிவுக்கு பொறுப்பாக இருந்த காலப்பகுயில் இளைஞர்கள் கடத்தி வைக்கப்பட்டிருந்த திருகோணமலை முகாமை கண்காணிப்பு செய்துள்ளார்.

நல்லாட்சியில் மறுக்கப்பட்ட நீதி 

அவர் இது தொடர்பில் பல காலம் சம்பவத்தை அறிந்து மறைத்துள்ளார்.

குறித்த இளைஞர்களை 2009 ஆம் கடத்தப்பட்டு பல காலம் அடைத்து வைத்துள்ளனர். அக்காலப்பகுதில் சில இளைஞர்கள் தமது பெற்றோர்களிடம் கதைத்துள்ளனர்.

கொழும்பில் கடத்தப்பட்ட 11 இளைஞர்கள் நிலத்தடி முகாமில்! உலுகேதென்ன மறைத்த இரகசியம் | 11 Youths Abducted Colombo Held Underground Camp

எவ்வளவு காலம் இருந்தார்கள் என்பதை குற்றஞ்சாட்டபட்டவர்கள் தான் தெரிவிக்க வேண்டும்.

2009 ஆம் ஆண்டு கோட்டபாய தான் காணாமல் ஆக்கப்பட்டவர் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கூறினார்.

ஆனால் அவருக்கே தெரியாமல் போய் விட்டது இந்த விசாரணை இவ்வளவு தூரம் வரும் என்று.

அப்போது அவர் போரில் ஈடுபட்ட பாதுகாப்பு தரப்பினரை கைது செய்ய முடியாது என்று விசாரணைகளை நிறுத்த அழுத்தம் கொடுத்தார்.

அப்போது தான் நான் பெற்றோர்கள் சார்பில் முன்னிலையானேன். எமக்கு வழக்கை தொடர்ந்து நடத்த முடியாத நிலைக்கு கொலை அச்சுறுத்தல் மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்புடன் எனக்கு தொடர்பு இருப்பாத பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.

மேலும், அக்காலத்தில் வெள்ளை வான் காலாசாரமும் இருந்த நிலையில் தான் நாங்கள் போராடினோம்.

அதன் பிறகு நல்லாட்சியில் நீதி கிடைக்கும் என் நினைத்தோம். அதிலும் ஒன்றும் நடக்கவில்லை. தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் பல கோணங்களில் தடைகளை ஏற்படுத்தின.

மேலும் ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கோவிட் காலத்தில் ஊடகங்கள் வாயிலாக எனக்கும் குறித்த பொற்றோர்களுக்கும் பல அவதூறு பரப்புரைகள் செய்யப்பட்டன.

2009 ஆம் ஆண்டின் பின் இருந்த அனைத்து ஜனாதிபதிகளையும் சந்திக்க பெற்றோர்கள் சார்பில் கடிதம் எழுதி சந்தர்ப்பம் கேட்ட போது எவ்வித சந்தர்ப்பமும் வழங்கவில்லை” என கூறியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.