பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளால் வெளியிடப்பட்டதாக பொய்யாகக்
கூறி சமூக ஊடகங்களில் பரவும் போலி கடிதம் தொடர்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து பொலிஸார் பொதுமக்களை
எச்சரித்துள்ளனர்.
போலி பெயர்கள் மற்றும் கையொப்பத்துடன் கடிதம்
போலியான பெயர்கள் மற்றும் கையொப்பங்களைக் கொண்ட இந்த கடிதம், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இது, வேண்டுமென்றே, பரப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

விசாரணை ஆரம்பம்
இந்த நிலையில், குறித்த போலியான கடிதத்துக்கு பொறுப்பானவர்களை கண்டறிய
பொலிஸ் கணினி குற்றப்பிரிவு விசாரணையை ஆரம்பித்துள்ளது.

