முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இரண்டு மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்ட ரணிலின் கைது!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது தொடர்பில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் ஹன்சாட் படுத்தியதாக அமைச்சரும் அவைத் தலைவருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தன்னுடைய மனைவி மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழா ஒன்றுக்காக லண்டன் சென்றிருந்த நிலையில், குறித்த பயணத்திற்கு அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இன்று நாடாளுமன்றில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

ரணில் விக்ரமசிங்க

“நீதிக்கு முன் அனைவரும் சமம் என்ற கோட்டபாட்டிலேயே ரணில் விக்ரமசிங்கவை கைது செய்துள்ளோம்.

இரண்டு மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்ட ரணிலின் கைது! | Ranil S Arrest Which Made Public Two Months Ago

இதற்கான காரணங்கள் அனைத்தும் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால் எதிர்க்கட்சியினர், அவர்களின் உறுப்பினர்களுக்கு நடக்கும் பொது பலிவாங்கல் என தெரிவிக்கிறனர்.

மற்றையவருக்கு நடந்தால் அது நீதி தங்களுக்கு நடந்தால் அது பலிவாங்கலாக பார்க்கின்றனர்” என்றார்.

விசாரணை

இன்றையதினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்ட ரணிலின் கைது! | Ranil S Arrest Which Made Public Two Months Ago

இந்நிலையில் இங்கிலாந்து பயணத்தின் ஒரு பகுதி தனிப்பட்ட காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் அரச நிதியில் இருந்து நிதியளிக்கப்பட்டதாகவும், ரூ. 16.9 மில்லியன் செலவாகியதாகவும் பொலிஸார் தெரிவித்த நிலையில் அது தொடர்பிலான விசாரணைக்காகவே அழைக்கப்பட்டிருந்தார்.

விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளராக இருந்த சமன் ஏகநாயக்க மற்றும் ரணிலின் தனிப்பட்ட செயலாளராக இருந்த சாண்ட்ரா பெரோரா ஆகியோரிடம் பொலிஸார் ஏற்கனவே வாக்குமூலம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் – கொடியிறக்கம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்