சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை இன்னும் சீராக வில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் மகசின் சிறைச்சாலைக்கு ரணில் அழைத்து வரப்பட்டதாகவும், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு அதிகரித்ததை அடுத்து வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்ற பரிந்துரைத்ததாகவும் சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இன்று பிற்பகல் அவரது இரத்த அழுத்தம் மேலும் அதிகரித்ததாக கூறப்படுகிறது.
முக்கிய அரசியல்வாதிகள்
இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட பல அரசியல்வாதிகள் இன்று (23) காலை முன்னாள் ஜனாதிபதியை சந்திக்க வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனைக்குச் சென்றனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (22) உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

