முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சாவகச்சேரி நகராட்சி மன்ற உபதலைவர் – உறுப்பினருக்கு எதிராக பெண்ணொருவர் காவல்துறை முறைப்பாடு

சாவகச்சேரி நகராட்சி மன்ற உபதலைவர் மற்றும் உறுப்பினருக்கு எதிராக காவல்துறையில் பெண்ணொருவர் முறைப்பாடு அளித்துள்ளார்.

சாவகச்சேரி நகரசபையின் உபதவிசாளர் ஞா.கிஷோர் மற்றும் உறுப்பினர் கு.பிரணவராசா
ஆகியோருக்கு எதிராகவே குறித்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

தன்னை அச்சுறுத்தி தொலைபேசியை பறித்ததாக குறித்த பெண் இவர்கள் மீது முறைப்பாடு அளித்து இருந்தார்.

உறுப்பினர்களின் கௌரவம் 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சாவகச்சேரி நகராட்சி மன்றத்தினால் கோவில் குடியிருப்பு உப்புக்கேணிக்குளம்
தூர்வாரும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுள்ளது.

சாவகச்சேரி நகராட்சி மன்ற உபதலைவர் - உறுப்பினருக்கு எதிராக பெண்ணொருவர் காவல்துறை முறைப்பாடு | Complaint Against Chavakachcheri Officials

தூர்வாரும் பணிகளை கண்காணிக்கச் செல்லும் நகரசபை உறுப்பினர்களை அப்பகுதியை
சேர்ந்த பெண் ஒருவர் அவதூறான வார்தைகளில் பேசி கலைத்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த சபை அமர்வில் உறுப்பினர்களால் குறித்த விடயம்
விவாதிக்கப்பட்டதோடு உறுப்பினர்களின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும்
கோரிக்கை விடுத்திருந்தனர்.

மாதாந்த அமர்வு 

இதையடுத்து, மாதாந்த அமர்வு நிறைவடைந்ததும் தவிசாளர், உபதவிசாளர் மற்றும்
உறுப்பினர்கள் உப்புக்கேணிக்கு களவிஜயம் மேற்கொண்டுள்ளனர்.

சாவகச்சேரி நகராட்சி மன்ற உபதலைவர் - உறுப்பினருக்கு எதிராக பெண்ணொருவர் காவல்துறை முறைப்பாடு | Complaint Against Chavakachcheri Officials

இதன்போதும் குறித்த பெண் நகராட்சி மன்ற உறுப்பினர்களை தகாத வார்த்தைகளில்
பேசியதோடு காணொளி பதிவு செய்துள்ளார்.

இதையடுத்து உபதவிசாளர் கிஷோர்
உறுப்பினர்களோடு மரியாதையோடு நடந்து கொள்ளுமாறும் நகரசபையின் பணிகளில் தலையிட
வேண்டாம் எனவும் குறித்த பெண்ணை எச்சரித்துள்ளார்.

அபிவிருத்திப் பணி

இந்தநிலையில் உபதவிசாளர் கிஷோர் மற்றும் வட்டார உறுப்பினர் பிரணவராசா ஆகியோர்
தன்னை அச்சுறுத்தி தொலைபேசியை பறித்ததாக குறித்த பெண் சாவகச்சேரி காவல்துறையில்
நிலையத்தில் முறையிட்டுள்ளார்.

இதனால் உபதவிசாளர் கிஷோர் மற்றும் உறுப்பினர் பிரணவராசா ஆகியோர் நேற்றையதினம்
சாவகச்சேரி காவல் நிலையத்துக்கு நேற்று (22) அழைக்கப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி நகராட்சி மன்ற உபதலைவர் - உறுப்பினருக்கு எதிராக பெண்ணொருவர் காவல்துறை முறைப்பாடு | Complaint Against Chavakachcheri Officials

இதன்போது முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை சாவகச்சேரி காவல் நிலைய பொறுப்பதிகாரி முன்னெடுத்துள்ளார்.

இதையடுத்து, நகரசபையின் அபிவிருத்திப் பணிகளிலும் மற்றும் உறுப்பினர்களின்
பணிகளிலும் குறித்த பெண் தலையிட முடியாது என்றும் அபிவிருத்தி பணிகளில்
குறைபாடு இருந்தால் நகரசபைக்கு எழுத்துமூலமாக அறிவிக்கலாம் என்றும்
அறிவுறுத்தி வாக்குமூலம் பெற்று விசாரணைகளை முடித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.