தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு (Harin Fernando) எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த பொதுத் தேர்தலின்போது தேர்தல் சட்டங்களை மீறியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்காக ஹரின் பெர்னாண்டோ இன்று (26) பதுளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
இதன்போது, பதுளை நீதவான் நுஜித் டி. சில்வா வழக்கு விசாரணையை 2026 ஜனவரி 6ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
காவல்துறையினரால் கைது
இதேவேளை கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பதுளை மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் 10ஆம் இலக்கத்தில் ஹரின் பெர்னாண்டோ போட்டியிட்டிருந்தார்.

இந்த நிலையில் தேர்தல் சட்டத்தை மீறிய சம்பவம் தொடர்பில் ஹரின் பெர்னாண்டோ பதுளை காவல்துறையினரால் கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.
பின்னர் தலா 05 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்கபபட்டமை குறிப்பிடத்தக்கது.

