அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் காரணமாக கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள வீதியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது இன்று (26) இடம்பெற்றுள்ளது.

“கல்வியியல் பட்டப்படிப்பின் தகுதிகளை உருவாக்கு”, “கல்வியியல் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கான நடைமுறையை ஒழுங்குபடுத்து” ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

