யாழ் (Jaffna) மாவட்ட இளைஞர் சம்மேளன இளைஞர்களுக்கான சதுரங்க போட்டி சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
குறித்த போட்டியானது தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்தினால் வருடம் தோறும் நடத்தப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில், தேசிய இளைஞர்
சேவைகள் மன்றத்தின் யாழ் மாவட்ட இளைஞர்கள் பயிற்சி நிலையம் கல்லுண்டாயில் இன்று (30) காலை
9:30 மணியளவில் போட்டிகள் இடம்பெற்றுள்ளது.
சுற்று போட்டி
இந்த சுற்று போட்டியில் யாழ் மாவட்டத்திற்கு உட்பட்ட பிரதேச சம்மேளனங்களில்
தெரிவு செய்யப்பட்ட சதுரங்க விளையாட்டு வீரவீரங்கணைகள் மிக ஆர்வமாக
பங்கு பற்றியுள்ளனர்.

மேலும், மாவட்ட இளைஞர் சம்மேளன உறுப்பினர்கள் மற்றும்
இளைஞர்கள் சேவைகள் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



