முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் ரவீந்திரநாத் கடத்தல்! போராட்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் ரவீந்திரநாத் கடத்தப்பட்டும், கிழக்கு பல்கலைக்கழகத்தில் அகதிகளாகயிருந்த 150க்கும் மேற்பட்டோர்
கொண்டுசெல்லுப்பட்டு இதுவரையில் என்ன நடந்தது என்ற தெரியாத நிலையிலும் அதற்காக
குரல்கொடுக்கவேண்டிய கடப்பாடு தமக்கு உள்ளதாக கிழக்கு பல்கலைக்கழக கலை
கலாச்சார பீட மாணவர் ஒன்றிய தலைவர் துரையப்பா லக்சன் தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீட மாணவர்களின் ஊடகவியலாளர் சந்திப்பு
மட்டு.ஊடக அமையத்தில் நேற்றையதினம்(29) மாலை நடைபெற்றது.

 தமிழ் இன மக்கள்

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் ரவீந்திரநாத் கடத்தல்! போராட்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு | East Uni Vice Chancellor Kidnapped

ஒவ்வொரு வருடமும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி வந்தால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்
போராட்டம் நடத்துவது வழமையான ஒன்றாக மாறியிருக்கின்றது.

ஆனால் இதுவரைக்கும்
அதற்கான தீர்வுகள் தமிழ் இன மக்களுக்கு கிடைக்கப் பெறவில்லை அந்த அடிப்படையில்
நாளைய தினமும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் மூலமாக
கிழக்கு மாகாணத்திலும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட இருக்கின்றது.

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் என்கின்ற அடிப்படையில் எமது குரலையும் அந்த
போராட்டத்தில் இணைக்க வேண்டும் என்பது எங்களது உரிமையாகவும் முக்கிய
கடமையாகவும் இருக்கின்றது.

தமிழ் சமுதாயம்

காரணம் அனைவருக்கும் தெரியும் 2006ம் ஆண்டு
டிசம்பர் 15 ஆம் திகதி எமது முன்னாள் உபவேந்தர் கொழும்பு விஞ்ஞான முன்னேற்ற
சங்கத்தில் உரை நிகழ்த்தி விட்டு வரும்போது அவர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம்
இன்று வரைக்கும் அதற்கான தீர்வுகள் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை அவர்
உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்கின்ற தகவல் கூட யாருக்கும்
கிடைக்கப்பெறவில்லை.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் ரவீந்திரநாத் கடத்தல்! போராட்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு | East Uni Vice Chancellor Kidnapped

அதேபோன்று 1990 ஆம் ஆண்டு காலகட்டத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் அகதி
முகாம்களில் வைக்கப்பட்டிருந்த 150 நபர்கள் கைது செய்யப்பட்டு கொண்டு
செல்லப்பட்டார்கள் அவர்களது இருப்பும் இன்று வரை உறுதி செய்யப்படாத ஒன்றாக
தான் இருந்து வருகிறது.

இவ்வாறு பலர் வடக்குக் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டு
இப்போது வரை எந்தவிதமான முடிவுகளும் தெரியாத சூழ்நிலையில் அதற்கு எதிராக குரல்
கொடுக்க வேண்டிய கட்டாயப் பாட்டில் தமிழ் சமுதாயமும் இளைஞர் சமுதாயமும்
இருந்து வருகின்றது.

இந்த போராட்டத்தில் அனைத்து தமிழர்களும் நமது உறவினர்களுக்காக குரல்
கொடுப்பதற்காகவும் அதற்கான தீர்வையும் நமக்கான நியாயத்தையும் பெற்றுக்
கொள்வதற்காக ஒன்று கூடுமாறு கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீடமானவர்
சார்பாகவும் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.