செப்டெம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என இலங்கை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (Ceylon Petroleum Corporation – CPC) அறிவித்துள்ளது.
விலை திருத்தம்
இதற்கமைய, இறுதியாக மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை திருத்தத்தின் படி, வெள்ளை டீசல் லீட்டர் 289 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீட்டர் 325 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
92 ஒக்டேன் ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 305 ரூபாவாகவும், 95 ஒக்டேன் ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 341 ரூபாவாகவும், மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் விலை 185 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

