முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்த ஆண்டின் இறுதி வாய்ப்பு! வானில் நிகழவுள்ள அரிய வகை சந்திர கிரகணம்

வானில் அரிய வகை முழு சந்திர கிரணம் தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் 7 ஆம் திகதி தென்படவுள்ள, இந்த முழு சந்திர கிரணம், இவ்வாண்டின் கடைசி முழு சந்திர கிரகணமாகும்.

இரத்த நிலவு என்று அழைக்கப்படும் இந்த முழு சந்திர கிரணம், அடர் சிவப்பு நிறத்தில் காணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அரிய வகை முழு சந்திர கிரணம்

குறித்த முழு சந்திர கிரகணம் 82 நிமிடங்கள் நிகழும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் இறுதி வாய்ப்பு! வானில் நிகழவுள்ள அரிய வகை சந்திர கிரகணம் | Lunar Eclipse September

இந்த அற்புதமான நிகழ்வு நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் முழுமையாகத் தெரியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் தலைவரும், வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளருமான பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 7 ஆம் திகதி இரவு வானத்தில் முழு சந்திர கிரகணம் தோன்றுவதால், இலங்கையர்கள் மற்றும் வானியல் ஆர்வலர்களுக்கு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.

சந்திர கிரகணம் நிகழும் நேரம்

உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 77% பேருக்கு இந்த சந்திர கிரகணத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே ஏற்படும் பல கிரகணங்களைப் போல் அல்லாமல், ஆசியா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த கிரகணத்தை தௌிவாக அவதானிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் இறுதி வாய்ப்பு! வானில் நிகழவுள்ள அரிய வகை சந்திர கிரகணம் | Lunar Eclipse September

சந்திர கிரகணம் நிகழும் நேரம் பின்வருமாறு,

கிரகணம் ஆரம்பம் – செப்டம்பர் 7 ஆம் திகதி இரவு 8:58

பகுதி கிரகணம் ஆரம்பம் – இரவு 9:57

முழுமையான கிரகணம் – இரவு 11:01

அதிகபட்ச கிரகணம் – நள்ளிரவு 11:42

கங்கண கிரகணம் முடிவு – அதிகாலை 12:22 (செப்டம்பர் 8)

பகுதி கிரகணம் முடிவு – அதிகாலை 1:26

கிரகணம் முடிவு – அதிகாலை 2:25

பூமி சூரியனை சுற்றி வரும் பாதையிலும், சந்திரன் பூமியை சுற்றி வரும் பாதையிலும் சில நேரங்களில் சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும். அப்போது, சூரிய ஒளி பூமியில் விழுந்தாலும் சந்திரன் மீது விழாது. இதனால் சந்திர கிரகணம் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.