முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளிநொச்சியில் காவல்துறையினரின் உச்சக்கட்ட அசமந்த போக்கு!

கிளிநொச்சியில் (Kilinochchi) தனியார் காணியொன்று தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளதாகவும் முறைப்பாடு அளித்தும் காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் கரைச்சி பிரதேசசெயலகத்துக்கு உட்பட்ட
வன்னேரிக்குளம் கிராமத்தின் மண்ணியாகுளம் குடியேற்றப் பிரதேசத்தில் உள்ள
தனியார் காணியொன்றே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மண்ணியாகுளத்தில் பெண்ணொருவருக்கு சொந்தமான 24 ஏக்கர் வயலும், பனையும் சேர்ந்த
காணிக்குள் அத்துமீறி நுழைந்தவர்கள் அங்கிருந்த நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த
பனங் கூடல்களுக்கு தீ வைத்து அழித்ததுடன், சில பனைமரங்களை முற்றாக வெட்டியும்
அழித்துள்ளனர்.

அபிவிருத்தி சபை

காணி உரிமையாளருக்கு ஊர் மக்கள் வழங்கிய தகவலை தொடர்ந்து இது தொடர்பில் பனை
அபிவிருத்தி சபைக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் காவல்துறையினரின் உச்சக்கட்ட அசமந்த போக்கு! | Palmyrah Trees Burned In Kilinochchi

இருப்பினும், அவர்கள்
தங்களுக்கு இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க எந்த அதிகாரமில்லை எனக் கையை
விரித்ததுடன், பிரதேச செயலகத்துக்கு அறிவிக்குமாறும் தெரிவித்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காணி உரிமை

இந்தச் சம்பவம் தொடர்பில் காணி உரிமையாளரால் அக்கராயன் காவல் நிலையத்தில் கடந்த (29.08.2025) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டும் இதுவரை பொலிஸார்
எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் காவல்துறையினரின் உச்சக்கட்ட அசமந்த போக்கு! | Palmyrah Trees Burned In Kilinochchi

வடமாகாணத்தில் அழிந்து வரும் பனை மரங்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள்
எடுக்கப்படுவதாக அரசாங்க உயர்மட்டங்களில் கூறிக் கொண்டாலும் சம்பந்தப்பட்ட
தரப்புகள் அமைதியாக இருப்பது தொடர்பில் அப்பகுதி பொதுமக்கள் விசனம்
தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்