முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மன்னாரில் இருந்து காற்பந்தாட்ட தேசிய அணிக்கு தெரிவான வீரர்கள்

இலங்கையின் 16 வயதின் கீழ் உதைபந்தாட்ட தேசிய அணியில் மாணவர்களை உள்வாங்குவதற்காக
நடைபெற்ற தேர்வில் மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசலையை சேர்ந்த இரு
மாணவர்கள் தெரிவாகி மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களான செல்வன்
N.கெஸ்ரோன், செல்வன் K.ஜெனிஸ்ரன் ஆகியோர் குறித்த தெரிவில் கலந்துகொண்டு சிறப்பாக
விளையாடி திறமையை வெளிப்படுத்தியதன் அடிப்படையில் தேசிய அணிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இரு மாணவர்களும் கலந்து கொள்ளும் முதலாவது சர்வதேச உதைபந்தாட்ட
போட்டியானது சீனாவில் இம்மாதம் 20ம் திகதி தொடக்கம் 28ம் திகதி வரை
நடைபெறவுள்ளது.

மேலதிக பயிற்சிகள்

“U16 Tainyu Liufang Cup – 2025” என்ற குறித்த போட்டிக்கான மேலதிக பயிற்சிகள் இம்மாதம் 4ஆம் திகதி முதல் கொழும்பில் நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னாரில் இருந்து காற்பந்தாட்ட தேசிய அணிக்கு தெரிவான வீரர்கள் | Mannar Boys Selected To The National Football Team

இம்மாணவர்கள் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் இருந்து தமது கல்வியை மேற்கொள்கின்றார்கள் என்ற அடிப்படையில் குறித்த மாணவர்களுக்கு உதவி செய்ய விரும்புவோர் அதிபர் ஊடாக உங்கள் உதவிகளை வழங்கி அந்த மாணவர்களின் திறமைக்கான அங்கீகாரம் பெறுவதற்கு உதவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை 

இம்மாணவர்களது மேலதிக பயிற்சிக்கான செலவையும், அவர்கள் சீனாவில் இருக்கும் போது ஏற்பட உள்ள மேலதிக செலவையும் தாங்கிக் கொள்வதற்கான பண வசதி இல்லாத சூழ்நிலையில் தற்போது இருக்கிறார்கள்.

மன்னாரில் இருந்து காற்பந்தாட்ட தேசிய அணிக்கு தெரிவான வீரர்கள் | Mannar Boys Selected To The National Football Team

எனவே இம் மாணவர்களை ஊக்கப்படுத்தி தேசிய மட்ட அணியில் ஒருவராக விளையாடுவதற்கு தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்கி உதவுமாறு பாடசாலை சமூகம் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

குறித்த மாணவர்களுக்கு உதவி செய்ய
விரும்புவோர் அதிபர் ஊடாக உதவிகளை வழங்கி அந்த மாணவர்களின் திறமைக்கான
அங்கீகாரத்தை பெறுவதற்கு உதவுமாறு கேட்டுகொள்ளப்படுகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.