திஸ்ஸமஹாராம காவல்துறைக்குச் சொந்தமான ஒரு நடமாடும் ரோந்து ஜீப் நேற்று (03) இரவு திருடர்களால் திருடப்பட்டு, ஒரு பக்கவாட்டு சாலையில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் காவல்துறை விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
முறைப்பாட்டை விசாரிக்க சென்ற காவல்துறை
இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நான்கு காவல்துறை கொண்ட குழு 119 அவசர அழைப்பு மையத்தில் பெறப்பட்ட புகாரை விசாரிக்கச் சென்றிருந்தது.

புகாரை விசாரிக்க அனைத்து காவல்அதிகாரிகளும் ஜீப்பை நிறுத்திவிட்டு அதிலிருந்து இறங்கினர், அந்த நேரத்தில் ஜீப்பின் இயந்திரம் இயங்கிக் கொண்டிருந்தது. இந்த சூழ்நிலையே திருட்டுக்கு வழிவகுத்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
கடத்தப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட ஜீப்
திருட்டு நடந்த இடத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில், இயந்திரம் அணைக்கப்பட்ட நிலையில், கைவிடப்பட்ட நிலையில் ஜீப் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். வாகனத்தின் சாவியும் உரிய இடத்தில்காணப்பட்டது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை, விசாரணைகள் நடந்து வருகின்றன.
ஜீப்பின் எஞ்சினை இயங்கு நியைில் விட்டுச் சென்ற ஓட்டுநருக்கு எதிராகவும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

