வாகன விபத்துக்கள் தொடர்பில் சாரதிகளுக்கு தெளிவூட்டும் விதமாக இலங்கை பொலிஸ் திணைக்களம் முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது.
குறித்த தெளிவூட்டலை தற்போது பயனர்களால் அதிகம் பகிரப்படும் AI தொழில்நுட்ப புகைப்படத்தை வைத்து பொலிஸ் திணைக்களம் வெளிப்படுத்தியுள்ளது.
குறித்த தெளிவூட்டலில் ஓட்டுநர் தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றாமல் வாகனம் ஓட்டினால், அதிக வேகத்தில் வாகனம் ஓட்டினால், அல்லது பைக்கை முறையாக சர்வீஸ் செய்யாமல் வாகனம் ஓட்டினால், இந்தக் குற்றங்களில் ஏதேனும் ஒன்றைச் செய்தால் என்ன நடக்கும் என்பதைக் காட்டுங்கள் என AI – யிடம் கோரப்பட்டுள்ளது.
AI வழங்கிய பதில்
இதன்படி குறித்த கோரிக்கைக்கு அமைய, AI வழங்கிய பதில் பதிவில், விபத்து தொடர்பான தெளீவூட்டல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், AI கூட விபத்து தொடர்பில் அறிந்திருப்பதாகவும், ஆனால் சாரதிகள் இது தொடர்பில் அறித்துள்ளனரா? என பொலிஸ் திணைக்களம் கேள்வி எழுப்பியுள்ளது.


