முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிழக்கு மாகாண சபை தேர்தல் நடாத்தப்படுமா? அரசிடம் கேள்வி

கிழக்கு மாகாணசபை தேர்தல் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக பிற்போடப்பட்டு
வருகின்றது எனவே, ஜனநாயகத்தை மதிப்பதாக ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் என்றால்
மாகாணசபை தேர்தல் நடாத்த அவசரமாக நடவடிக்கை எடுக்க சட்ட ஏற்பாடுகளை
முன்னெடுக்க வேண்டும் அல்லது இந்த முறைமை பொருத்தம் இல்லை இதை நீக்குவது என
மக்களுக்கு அரசு கூறவேண்டும் என கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ்
மக்கீன் வலிறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு காத்தான்குடியில் உள்ள சுதந்திரமானதும் நீதியானதும் மக்கள்
இயக்கமான கபே அமைப்பின் காரியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (5) மாவட்ட
இணைப்பாளர் தேசியமானிய ஏ.சி.எம். மீராஸாஹிப் தலைமையில் இடம்பெற்ற ஊடக
மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஒவ்வொரு தேர்தலிலும் தேர்தல் கண்காணிப்பு

 சுதந்திரமானதும் நீதியானதும் மக்கள் இயக்கம் 2008 தொடக்கம் இதுவரையான
காலப்பகுதியில் இலங்கையில் நடாத்தப்பட்ட ஒவ்வொரு தேர்தலிலும் தேர்தல்
கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளது. அதேபோல தேர்தல் அல்லாத காலத்தில்
வாக்காளர்களுக்கு தேவையான அறிவுறுத்தல் நிகழ்சிகளை நடாத்தி வருகின்றோம்.

கிழக்கு மாகாண சபை தேர்தல் நடாத்தப்படுமா? அரசிடம் கேள்வி | Eastern Provincial Council Elections Be Held

 அதேவேளை தேர்தல்கள் உரியகாலத்தில் நடாத்தப்படுவது தொடர்பில் ஒவ்வொரு
காலத்திலும் மிக அவதானம் செலுத்தி வருகின்றோம். இலங்கையை பொறுத்தளவில் கடந்த
கால அரசியல் வரலாற்றை பார்க்கின்றபோது தேர்தல்கள் நடாத்த ப்படும் காலத்தை
பார்த்தால் உத்தியோக பூர்வ கால எல்லை முடிவடைவதற்கு முன்னர் அந்த காலங்களில்
இருந்த அரசாங்கங்கள் அவர்களுக்கு சாதகமான காலங்கள் வருகின்றபோது தேர்தல்களை
நடாத்தி இருக்கின்றனர் .

அதேபோல உத்தியோகபூர்வ கால எல்லை முடிவடைந்தும் பதவியில் இருக்கும்
அரசாங்கத்துக்கு ஒரு சாதகமான காலம் வரும் வரைக்கும் பல மாதங்கள் பல வருடங்கள்
நாட்களை கடாத்திவிட்டு அந்த தேர்தல்களை தொடர்ச்சியாக பிற்போட்டு
நடாத்தி இருப்பதை நாங்கள் அவதானித்திருக்கின்றோம்.

ஒத்தி வைக்கப்படும் தேர்தல்கள்

ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், மாகாணசபை தேர்தல், உள்ளுராட்சி மன்ற
தேர்தல்கள்; நடாத்தப்படவேண்டியது உத்தியோக பூர்வமாக கால எல்லைகள் வரையறைகள்
வழங்கப்பட்டிருந்தாலும் கடந்த காலங்களில் வரையறைகள் இருந்த சந்தர்ப்பங்களை
மீறி காலங்கள் கடத்தியும் காலங்கள் முடிவடைவற்கு முன்னரும் ஏன் ஜனாதிபதி
தேர்தல் கூட பதவிக்காலம் ஒரு வருடத்துக்கு இருக்கின்றபோது கூட அப்போது இருந்த
ஜனாதிபதி சுயமாக விருப்பத்தை தெரிவித்து அவர் முன்கூட்டியே தேர்தலை நடாத்திய
வரலாற்றை கண்டிருக்கின்றோம்.

கிழக்கு மாகாண சபை தேர்தல் நடாத்தப்படுமா? அரசிடம் கேள்வி | Eastern Provincial Council Elections Be Held

 கிழக்கு மாகாணசபை தேர்தல் கடைசியாக 2012 செட்டெம்பர் மாதம் 8 ம் திகதி
நடைபெற்றது இந்த மாகாணசபை தேர்தல் உத்தியோக பூர்வ கால எல்லை 2017 செட்டெம்பர்
மாதம் 30 ம் திகதி முடிவடைந்தது. இருந்தபோதும் 2017 இல் இருந்து இது வரைக்கும்
ஒரு மாகாணசபைக்கான 5 வருட ஆயுட்காலம் முடிந்து 4 வருடங்கள் கடந்தும்
நடாத்தப்படாமல் உள்ளது

 ஆனாலும் அந்த தேர்தலை நடாத்துவதற்குரிய ஏற்பாடுகள் நடாத்தப்படுவது போல
மக்களுக்கு காட்டப்பட்டு அது பல்வேறு காரணிகளால் பிற்போடப்பட்டுள்ளது. சட்ட
சிக்கல் இருப்பதால் இந்த தேர்தலை நடாத்தப்படாமல் காணப்படுகின்றது .

எனவே சட்ட சிக்கல் இருப்பதாக இருந்தால் இந்த சட்டச்சிக்கலை இல்லாமல் ஒழிப்பதாக
இருந்தால் மீண்டும் எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டுமாக இருந்தால் இன்னும் பல
வருடங்களை கடாத்துவதற்கு உரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படலாம். அதனால்
இன்னும் பல வருடங்களுக்கு மாகாணசபை தேர்தலை நடாத்த முடியாமல் போகும்.

நாடாளுமன்றத்தில் அதிக பெரும்பான்மை

ஆனாலும் இப்போது நாடாளுமன்றத்தில் அதிக பெரும்பான்மையுடன் ஆட்சியை செய்துவரும்
அரசாங்கம் நாடாளுமன்றத்தின் ஊடாக இந்த மாகாணசபை தேர்தல் தொடர்பாக
தீர்மானங்களை எடுக்க முடியும்.

கிழக்கு மாகாண சபை தேர்தல் நடாத்தப்படுமா? அரசிடம் கேள்வி | Eastern Provincial Council Elections Be Held

 கபே அமைப்பு கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் கடிதமூலம் ஜனாதிபதிக்கு மாகாணசபை
தேர்தல் தொடர்பாக தங்களது நிலைப்பாட்டை மக்களுக்கு கூறுமாறு வேண்டுகோள்
விடுத்தது

தற்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் இலங்கையில் மாகாணசபை பொருத்தமில்லை என
சிந்திப்பதாக இருந்தால் மக்களுக்கு கூறவேண்டும் இந்த மாகாணசபை முறைமை
பொருத்தமில்லாது எனவே இதை இல்லாதொழிக்க நடவடிக்கையை எதிர்காலத்தில் எடுப்போம்
என

அதேபோன்று நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் ஒவ்வொரு கட்சிகளுக்கும்
பொறுப்பு இருக்கின்றது இந்த மாகாணசபை தொடர்பாக அவர்களது நிலைப்பாட்டை
கூறவேண்டும். அதாவது மகாணசபை தேர்தல் நடாத்தப்பட வேண்டுமா? அல்லது தேவை
இல்லையா? ஏன ஒரு சரியான நிலையை ஒவ்வொரு கட்சியும் கூறுமாறு இந்த ஊடக
சந்திப்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

கிழக்கில் ஆளுநரின் ஆட்சி

 கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்ட ங்களில்
இருந்து மக்களின் வாக்குகளால் பிரதிநிதகள் தெரிவு செய்யப்பட்டு மக்கள்
பிரதிநிதிகள் ஆட்சி செய்த இடத்திலே கடந்த 2017ம் ஆண்டில் இருந்து சுமார் 5
வருடகாலங்கள் ஆளுநரின் நேரடி கண்காணிப்பில் ஆட்சி செய்வதை அவதானிக்க கூடியதாக
இருக்கின்றது

கிழக்கு மாகாண சபை தேர்தல் நடாத்தப்படுமா? அரசிடம் கேள்வி | Eastern Provincial Council Elections Be Held

இவ்வாறு மக்கள் பிரதிநிதிகள் பல இருந்த இடத்தில் ஒரு ஆளுநர் செயல்ப டுவதாக
இருந்தால் நிச்சயமாக ஜனநாயகத்துக்கு விரோமான செயற்பாடுகளுக்கு வழிவகுக்கும்
என்பதில் சந்தேகம் இல்லை கடந்த காலங்களில் மாகாணசபை தேர்தலை வைக்கவேண்டும் என
அப்போது இருந்த ஆட்சியாளர்களுக்கு கூறியிருந்தோம். அது தொடர்பாக சட்டங்கள்
கொண்டுவரப்பட்டது எல்லை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

ஆனால் அப்போது கூட்டமைப்பாக ஆட்சி அரசாங்கம் இதற்கு தேவையான ஆதரவை
நாடாளுமன்றத்தில் அப்போது இருந்த உறுப்பினர்கள் ஊடாக வழங்கப்படவில்லை. ஆனால்
தற்போது இருக்கும் ஆட்சியை பெறுப்பேற்ற அரசாங்கம் அவர்களது கொள்கை
பிரகடனத்தில் முக்கியமாக ஜனநாயத்தை மதிப்பது என தெரிவித்த அரசாங்கம்
ஜனநாயத்தை மதிக்கின்ற ஆட்சியாளர்கள்; என்றால் காலம் தாழ்த்தாமல் மாகாணசபை
தேர்தல் தொடர்பாக உரிய நடவடிக்கையை அவசரமாக எடுக்கவேண்டும் அதற்கான சட்ட
ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் அல்லாவிட்டால் மாகாணசபை முறை பொருத்தம் இலலை
அதை நீக்குவதாக மக்களுக்கு கூறவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.