முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

போதைப்பொருள் ரசாயனத்தை இலங்கைக்கு கொண்டு வந்த கப்பல்! கசிந்தது முக்கிய ஆவணம்

மித்தெனியவில் கண்டறியப்பட்ட ஐஸ் போதைப்பொருளுக்கான ரசாயன கொள்கலன்களை கொண்டு வந்ததாக கூறப்படும் கப்பல் மற்றும் பிற விடயங்கள் தொடர்பான விரிவான சுங்க ஆவணம் ஒன்று சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் 20 ஆம் திகதி ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்திலிருந்து இரண்டு கொள்கலன்களும் கொழும்பு துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மொரட்டுவ கோரலவெல்ல பகுதியில் உள்ள ஒரு நிறுவனம், ‘XIN HANG ZHOU’ என்ற கப்பல் மூலம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட இந்தப் பொருட்களின் இறக்குமதியாளராகப் பெயரிடப்பட்டுள்ளது.

எனினும், குறித்த ஆவணத்தில் சர்ச்சைக்குரிய எந்த பொருளும் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படவில்லை என்பதுடன், அவற்றில் டால்க் கற்கள் மற்றும் டால்க் தூள்(Talc stones, talcum powder) என்பனவே ஏற்றுமதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பொருட்கள் ஈரானிய நிறுவனமான ‘அஃப்ஷான் தாராபர் பர்சவா கோ’வால் ஏற்றுமதி செய்யப்பட்டன.

அவற்றில் ஒரு கொள்கலனில் 37,500 கிலோகிராம் (37.5 மெட்ரிக் டன்) அரை பதப்படுத்தப்பட்ட டால்க் கற்கள், மற்றொன்று 11,500 கிலோகிராம் (11.5 மெட்ரிக் டன்) டால்க் கல் தூள் இருந்தாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட இந்த சரக்குக்கான கட்டணம் ஜனவரி 9 ஆம் திகதி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும், இந்த இறக்குமதிக்காக மொத்தம் 522,718 இலங்கை ரூபாய் வரி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்