இலங்கை மின்சார சபை மீண்டும் இலாபமீட்டத் தொடங்கியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
நடப்பு ஆண்டின் ஆரம்ப காலாண்டில் இலங்கை மின்சார சபை 18.74 பில்லியன் நஷ்டத்தை எதிர்கொண்டிருந்தது.
மின்சார சபையின் வருமானம்
எனினும் அரையாண்டு நிறைவின் போது, இலங்கை மின்சார சபை, 5.31 பில்லியன் ரூபாய் இலாபமீட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மின்சார கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ள நிலையில், எதிர்வரும் காலாண்டில் மின்சார சபையின் வருமானம் இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

