மட்டக்களப்பு ஏறாவூர் ஆர்பிஎஸ் வீதியில் ஓட்டுப்பள்ளி பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு சொந்தமான வளாகத்தில் இருந்து குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படையினரால் இன்று(09) குறித்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.
அந்த வாளகத்தில் உள்ள சிறுவர் பள்ளிக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பெரும் பதற்றம்
அத்துடன், இந்த தேடுதல் நடவடிக்கையானது நீதிமன்ற அனுமதியுடன் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இவை 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் புதைக்கப்பட்ட குண்டுகளாக கூறப்பட்டாலும் அவற்றை நேரில் பார்த்த எமது ஊடகவியலாளர்கள் அவை புதியவை போல தோற்றமளித்ததாகவும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், குறித்த திடீர் சோதனை நடவடிக்கை காரணமாக அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதாக தெரியவருகிறது.



