முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திருடன் என தவாறாக சித்தரிக்கப்பட்ட இளைஞர்: மனமுடைந்து எடுத்த விபரீத முடிவு

திருடன் என தவாறாக சித்தரிக்கப்பட்டமையினால் மனமுடைந்து இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

ரொச்சில்ட் தோட்டத்தை சேர்நத 34 வயதுடைய ராமச்சந்திரன் புவனேஸ்வரன் முரளி என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், விடுமுறை கிடைத்தவுடன் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்திக்க செல்வதை குறித்த இளைஞன் வழக்கமாக கொண்டுள்ளார்.

பேருந்தில் தூக்கம்

இந்தநிலையில் கடந்த, ஆறாம் திகதி இரவு கொழும்பிலிருந்து (Colombo) வந்த அவர் பேருந்தில் தூங்கிய நிலையில் இறங்க வேண்டிய இடத்தில் இருந்து வெகுதூரம் சென்றுள்ளார்.

திருடன் என தவாறாக சித்தரிக்கப்பட்ட இளைஞர்: மனமுடைந்து எடுத்த விபரீத முடிவு | Colombo Youth Death After False Theft Claim

இதையடுத்து, நுவரெலியா (Nuwara Eliya) செல்லும் வழியில் ரம்பொடையில் வைத்து பேருந்தில் இருந்து இறங்கியுள்ளார்.

அதிகாலை இரண்டு மணி என்பதால் வீட்டிற்கு செல்ல பேருந்து இல்லாமையினால் அந்தப் பகுதியிலுள்ள தனது தாயின் சகோதரியின் வீட்டிற்கு செல்ல முயற்சித்துள்ளார்.

குடியிருப்பாளர்கள் 

இந்தநிலையில், இரவில் வழியை மறந்தமையினால் உதவிக்காக அங்கிருந்த வீடொன்றின் கதவைத் தட்டியுள்ளார்.

திருடன் என தவாறாக சித்தரிக்கப்பட்ட இளைஞர்: மனமுடைந்து எடுத்த விபரீத முடிவு | Colombo Youth Death After False Theft Claim

இருப்பினும், அவரை திருடன் என நினைத்து வீட்டிலுள்ளவர்கள் கூச்சலிட்ட நிலையில், ​​அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் வந்து அந்த இளைஞனை தாக்கியுள்ளனர்.

இதையடுத்து, கூடிய குடியிருப்பாளர்கள் அவரை கடுமையாக தாக்கி ஒரு மரத்தில் கட்டி வைத்து கொத்மலை காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

தொடர் விசாரணை

விசாரணைகளில் அவர் நிரபராதி என தெரியவந்த நிலையில், காவல்துறையினர் அவரை பிணையில் விடுவித்து, மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் ரோத்ஸ்சைல்ட் எஸ்டேட்டில் உள்ள உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

இருப்பினும், அவரை தாக்கியவர்கள் இந்த சம்பவத்தினை காணொளியாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.

திருடன் என தவாறாக சித்தரிக்கப்பட்ட இளைஞர்: மனமுடைந்து எடுத்த விபரீத முடிவு | Colombo Youth Death After False Theft Claim

இதனால் மனமுடைந்த குறித்த இளைஞர் தவாறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோத்மலை காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி வாஜிர ரத்நாயக்க மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்