முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மன்னார் நகர சபையில் ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்கள் வெகு விரைவில் சட்டத்தின் முன்…

மன்னார் நகர சபையில் இடம்பெற்ற ஊழல் குறித்து விசாரணைகள் மிக வேகமாக
இடம்பெற்று வரும் நிலையில் ஊழல் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் சட்டத்தினால்
தண்டிக்கப்படும் நிலை ஏற்படும் என மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன்
தெரிவித்துள்ளார்.

மன்னாரில் நேற்று(11) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார்.

நகர சபைக்குட்பட்ட காணிகளை 

மேலும் தெரிவிக்கையில்

மன்னார் நகர சபையினால் பல்வேறு விசேட தீர்மானங்கள்
எடுக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் ஞாயிறு தினங்களில் காலை முதல் மதியம் 2 மணி வரை
தனியார் வகுப்புக்கள் நிறுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானம்
எடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகர சபையில் ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்கள் வெகு விரைவில் சட்டத்தின் முன்... | Those Involved In Corruption And Fraud Mannar

மன்னார் நகரத்தில் போக்குவரத்தை இலகுபடுத்துவதற்காக புதிய நடைமுறைகளை  நடைமுறைப்படுத்துகின்றோம்.

போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக மன்னார் நகரத்தில் பஸ்
போக்குவரத்து சபை மற்றும் தரிப்பிடத்தில் பல மாற்றங்களை கொண்டு
வந்திருக்கின்றோம்.

பல இடங்களில் ஒரு வழிச்சாலையாக வாகனங்களை தரித்து
நிறுத்துவதற்காக பல இடங்களை அடையாளப்படுத்தி இருக்கிறோம்.

மேலும் மன்னார் நகர சபைக்குட்பட்ட காணிகளை எல்லைப்படுத்தி அந்த காணிகளை
துப்புரவு செய்து எல்லைப்படுத்தவதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளோம்.

வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கு 

மேலும் மன்னார் நகரத்தில் எவ்வித மணல் அகழ்வுகளையும் இடம்பெற
அனுமதிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகர சபையில் இடம்பெற்ற ஊழல் குறித்து விசாரணைகள் மிக வேகமாக
இடம்பெற்று வருகின்றது.விசாரணைக் குழுக்களும் வருகை தந்து விசாரணைகளை
மேற்கொண்டுள்ளது.

மன்னார் நகர சபையில் ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்கள் வெகு விரைவில் சட்டத்தின் முன்... | Those Involved In Corruption And Fraud Mannar

ஆளுநர் அலுவலகத்தில் இருந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமக்கு
கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இருந்து குழு ஒன்று வருகை தந்து ஆவணங்களை
பரிசீலித்துச் சென்றுள்ளனர். மிக விரைவில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட நபர்கள் சட்டத்தினால் தண்டிக்கப்படும்
நிலை ஏற்படும்.

மன்னார் நகர சபைக்கு ஏற்பட்ட நஷ்டம் மீள கிடைக்கப்பெறும்.

எனவே மக்கள் சட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

எதிர்வரும் வாரம் பொலிஸார்
மற்றும் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மன்னார் நகரத்தில் அடாவடித்தனத்துடன் மக்களின் போக்குவரத்து பாதைகளுக்கு இடையூறை ஏற்படுத்தி வியாபார
நடவடிக்கையில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
எடுக்கப்படும்.என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.