முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆயுட் காலம் இன்னும் ஒரு வருடமே! சம்பிக்க ரணவக்க

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்னும் ஒரு வருடமே ஆட்சியில் இருக்கும் என முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இணைத்தள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த செவ்வியில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
2004 ஆம் ஆண்டு ஜே.வி.பிக்கு 39 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருந்தனர்.அப்போது அவர்கள் நாடாளுமன்றத்தில் சாப்பிட மாட்டோம் உபவன்ச ஹோட்டலில் தான் சாப்பிடுவோம் என்றனர்.

பிரிந்து சென்ற ஜே.வி.பி உறுப்பினர்கள்

சிலர் நாடாளுமன்றத்திற்கு சாப்பாடும் கொண்டு வந்தனர்.வாகனத்திற்கான அனுமதிப்பத்திரம் தேவையில்லை என்றனர்.பின்னர் மாருட்டி என்ற சிறிய கார் போதும் என்றனர்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆயுட் காலம் இன்னும் ஒரு வருடமே! சம்பிக்க ரணவக்க | Achchige Patali Champika Ranawaka

அவ்வாறு சிறுக சிறுக வரப்பிரதாங்களுக்கு இணக்கம் தெரிவித்த நிலையில் 39 பேரில் 29 பேர் கட்சியைவிட்டு சென்றனர்.அதில் கடும் போக்காளர்களான, நந்தன கணதிலக்க,விமல் வீரவன்ச போன்றோரும் இருந்தனர்.விமல் வீரவன்ச ஜே.வி.பின் பிரசார பீரங்கியாக செயற்பட்டவர். இன்று ஓய்வுதியம் இரத்துச் செய்வதற்கு எதிராக முன்னிலை வகிப்பவர்களும் அவர்களே.

ஏனென்றால் அவர்களுக்கு வாழ்வாதார பிரச்சினைகள் இருக்கிறது. அதனால் 39 பேர் இருக்கும் போது இப்படி நடந்திருந்தால் 159 உறுப்பினர் இருக்கிறனர்.ஏதும் நடக்கலாம்.

இன்று தேசிய மக்கள் சக்தியில் 107 உறுப்பினர்கள் ஜே.வி.பியை சாராதவர்களாவர். இவர்கள் அரசியல் அலையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாவர். இன்று அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் கட்சியின் அறக்கட்டளைக்கு வழங்கப்படுகிறது.

107 உறுப்பினர்கள் ஜே.வி.பியை சாராதவர்கள்

கட்சியால் 70,000 ரூபா கொடுக்கப்படுகிறது. மாதிவலயிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இல்லங்களில் தங்கியுள்ளனர்.ஒரு வீட்டில் மூன்று நான்கு பேர் தங்கியுள்ளனர். அவர்கள் அங்கிருந்து பஸ்ஸில் நாடாளுமன்றம் அழைத்து வரப்படுகின்றனர்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆயுட் காலம் இன்னும் ஒரு வருடமே! சம்பிக்க ரணவக்க | Achchige Patali Champika Ranawaka

இவ்வாறான கடும் கட்டுப்பாட்டிலேயே இவர்கள் இருக்கின்றனர்.நாடாளுமன்றத்தில் வழங்கப்படும் உணவுக்கான 2000 ரூபா கொடுப்பனவை கூட சிலருக்கு செலுத்த முடியாத நிலை. இவர்களில் அநேகர் சட்டத்தரணிகளாவர்.

ஒருவர் என்னிடம் கூறினார், தான் மாதம் முப்பது இலட்சம் சம்பாதித்ததாக. அதனால் இவ்வாறான கட்டுப்பாடுகள் அவர்களில் வாழ்க்கையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.குறித்த காரணங்களால் பின்னாளில் கட்சி உடைப்பட்டு சின்னபின்னமாகலாம்.”என கூறியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.