ஐந்து வருடம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களுக்கு கிடைக்கின்ற ஓய்வூதியம் இரத்து செய்யப்படும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று(18.09) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “முன்னைய காலத்தைப் போன்று பாதுகாப்பு படையணி இல்லாமல், வாகன பேரணி இல்லாமல் அமைச்சர்கள் சாதாரணமாக வந்து செல்கின்றார்கள்.
ஓய்வூதியம் இரத்து
30 வருடங்களாக அரசு சொத்துக்களையும், இடங்களையும், பாவித்து கொண்டிருந்த தலைவர்கள் அவர்களுடைய சொந்த வீடுகளுக்கு போய்க் கொண்டிருக்கின்றார்கள்.

ஐந்து வருடம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள் அவர்களுக்கு கிடைக்கின்ற ஓய்வூதியம் இரத்து செய்யப்படும். அது சம்பந்தமாக தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது.
அது தொடர்பில் நீதிமன்றத்திலும் அனுமதி எடுத்து இருக்கின்றோம். விரைவில் அதற்குரிய சட்டமூலம் வர இருக்கிறது.
அரசியல் மாற்றம்
நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த அரசியல் மாற்றத்திற்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத மக்களும் சந்தோஷப்படுகிறார்கள்.

இந்த மாற்றத்திற்கு விருப்பம் இல்லாமல் இருப்பவர்கள் இந்த வரப்பிரசாதங்களை பெற்றுக் கொண்டிருந்த அரசியல்வாதிகள் மாத்திரம்தான்” என்றார்.

