முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நீண்ட நாளாக இராணுவமயமாக்கப்பட்ட காணி மக்களிடம் ஒப்படைப்பு..

அம்பாறை காரைதீவு இராணுவ முகாம்
அமைந்திருந்த காணி 35 வருடங்களின் பின்னர் பொது மக்களிடம்
கையளிக்கப்பட்டுள்ளது.

1990 ஆம் ஆண்டு முதல் காரைதீவில் 0.5 ஏக்கர் நிலப்பரப்பில்
காணப்பட்ட இந்த இராணுவ முகாம் காரைதீவு பிரதேச தவிசாளர் சுப்ரமணியம்
பாஸ்கரனிடம் நேற்றையதினம்(10) உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

 இராணுவ முகாம்

கடந்த 35 வருடங்களுக்கு முன்பு குறித்த பகுதியில் காரைதீவு பிரதேச சபையும்
பொது நூலகமும் இயங்கியிருந்தன.

இதே வேளை இராணுவ முகாம் அமைந்திருந்த காணியில்
தனியார் காணியும் விடுவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாளாக இராணுவமயமாக்கப்பட்ட காணி மக்களிடம் ஒப்படைப்பு.. | Land Amparai Karaitivu Army Camp Handed Over

அதனை பொறுப்பேற்பதற்காக இது தொடர்பான
உத்தியோகப்பூர்வ நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளர் ஜி.அருணனிடம் உத்தியோக
பூர்வமாக கையளிக்கப்பட்டது.

கடந்த 35 வருடங்களாக காரைதீவு பிரதான வீதியில்
அமைந்திருந்த இராணுவ முகாமில் காரைதீவு பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகம்
ஆகியவற்றிற்கான காணிகள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கிழக்கு
மாகாண இராணுவ அதிகாரிகள் உட்பட உயரதிகாரிகள் பங்குபற்றியிருந்தனர்.

 35 வருடங்களின் பின்னர் 

1990 ஆம்
ஆண்டு காலப் பகுதியில் இராணுவ முகாம் அமைந்திருந்த காணியில் இராணுவ முகாம்
நிலைகொண்டிருந்தமையை தொடர்ந்து அதில் இருந்த பிரதேச சபையும் பொது நூலகமும்
வேறு ஒரு இடத்திற்கு மாற்றப்பட்டு இயங்கி கொண்டிருந்தது.

இதனால் மாணவர்கள்
தங்களது கல்வியை பின் தொடர்வதற்கு போதிய இடவசதி இன்றி பெரும் சிரமப்பட்டு
வந்தனர்.

நீண்ட நாளாக இராணுவமயமாக்கப்பட்ட காணி மக்களிடம் ஒப்படைப்பு.. | Land Amparai Karaitivu Army Camp Handed Over

வட-கிழக்கு மாகாணங்களில் இராணுவ முகாம்களின் எண்ணிக்கையை
மட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் எடுத்த அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம்
இந்த கட்டத்தில் நிலை கொண்டிருந்த இராணுவ முகாம் அகற்றப்பட்டதாக
கூறப்படுகிறது.

இந்த முகாமை அகற்றி பிரதேச சபை பொது நூலக கட்டடத்தை மீள
ஒப்படைக்குமாறு கடந்த காலத்தில் பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அத்துடன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் குரல் எழுப்பி வந்தனர்.

இந்த
நிலையில் முதற் கட்டமாக இந்த இராணுவ முகாம் அகற்றப்பட்டுள்ளதுடன் இந்த
மாவட்டத்தில் நிலை கொண்டுள்ள மேலும் ஒரு சில இராணுவ முகாம்கள் கட்டம் கட்டமாக
அகற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.