வளமான நாட்டை உருவாக்கும் அரசாங்கத்தின் ஆட்சியில் 25 சதவீத மக்கள் ஏழைகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய(10.10.2025) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“அரசாங்கம் வளமான நாடு அழகான வாழ்க்கை குறித்து தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டிருந்தது. நாம் அனைவரும் அதை விரும்புகிறோம்.
உலக வங்கியின் அறிக்கை
கடந்த அரசாங்கம் தோல்வியடைந்ததால் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரத்தை வழங்கினர்.

இந்த அதிகாரம், ஒரு வளமான நாட்டை உருவாக்க வழங்கப்பட்டது. ஆனால், உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை, வேறுவிதமாக உள்ளது.

குறித்த அறிக்கையின் படி, நாட்டில் 25 சதவீதமானோர் ஏழைகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஒரு வளமான நாட்டில் 25 சதவீதம் பேர் ஏழைகளாக இருக்க வாய்ப்பில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

