இஷாரா செவ்வந்தியுடன் சேர்ந்து நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண், செவ்வந்தியின் உருவ ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் இருவரின் உருவ ஒற்றுமை விசாரணை அதிகாரிகளை திடுக்கிட வைத்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இஷாரா செவ்வந்தியை ஒத்த உருவத்தை கொண்ட குறித்த தமிழ் பெண்ணை பயன்படுத்தி நோபாளத்தில் இருந்து ஐரோப்பிய நாட்டுக்கு தப்பி செல்வதற்கு அவர்கள் திட்டம் தீட்டியிருந்ததாகவும் பொலிஸ் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கனேமுல்ல சன்ஜீவவின் கொலைக்கு பின்னர் இஷாரா செவ்வந்தி 4 நாட்கள் இலங்கையில் மறைந்திருந்துள்ளார். அப்போது மித்தெனிய மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்துள்ளார்.
இது உள்ளிட்ட மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களுடன் வருகின்றது இன்றைய செய்திகளின் தொகுப்பு,

