தங்காலை கடற்பரப்பில் மிதந்து காணப்பட்ட சுமார் 30 போதைப்பொருள் பொதிகள் இன்று (14.10.2025) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தங்காலை கடற்படை ரோந்துப் படகு மூலம் குறித்த போதைப்பொருள் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
கடற்படை ரோந்துப் படகில் உள்ள கடற்படை அதிகாரிகள் போதைப்பொருள் இருப்பை தரையிறக்கியுள்ளனர்.
ஐஸ் போதைப்பொருள்
இந்நிலையில், அவை தங்காலை கடற்றொழில் துறைமுகத்திற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு கடற்பரப்பில் மிதந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டவை ஐஸ் போதைப்பொருளாக இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
தங்காலை தலைமையக காவல்துறை அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

