மேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் டிக்கெட் வழங்காத நடத்துனர்கள் மற்றும் டிக்கெட் பெறாத பயணிகள் மீது நேற்று முதல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தச் சட்டத்தை மீறும் நடத்துனர்கள் 3 நாள் இடைநீக்கம் மற்றும் அபராதம் விதிக்கப்படும். அதே நேரத்தில் டிக்கெட்டுகளை தங்கள் வசம் வைத்திருக்காத பயணிகளும் அபராதம் செலுத்த வேண்டும்.
மேல் மாகாணத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் டிக்கெட் வழங்குவது கடந்த மாதம் முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டது.
பயணிகளுக்கு விசேட அறிவிப்பு
அதற்கமைய, கடந்த 14 நாட்களில், பேருந்துகளில் டிக்கெட் வழங்குவது முறையாக மேற்கொள்ளப்படுகிறதா என்று ஆய்வு நடத்தப்பட்டது.

அந்த காலகட்டத்தில், டிக்கெட் இல்லாத பயணிகளுக்கும், டிக்கெட் வழங்காத நடத்துனர்களுக்கும் மட்டுமே எச்சரிக்கைகள் வழங்கப்பட்டன.
எனினும் சட்டத்தை மீறும் பயணிகள் மற்றும் நடத்துனர்களுக்கு எதிரான கடுமையான சட்டத்தை அமுல்படுத்தும் நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

