கணேமுல்ல சஞ்சீவ வழக்கில் பிரதான சூத்திரதாரியான இஷாரா செவ்வந்தி, கடந்த 13ஆம் திகதி நேபாளத்தில் கைது செய்யப்பட்டு மறுநாள் 14 ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.
நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட செவ்வந்தி, தொடர்பில் தற்போது பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
அவர் நாட்டிற்கு அழைத்து வரப்படும் போது பதிவாகிய காணொளியில், ஏதோ சுற்றுலா சென்று வருவது போல் கைது செய்யப்பட்டவர்கள் வந்து சேர்ந்திருந்தமை குறித்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றது.
அதேவேளை, வெளியான இஷாரா செவ்வந்தியின் புகைப்படம், அதாவது வாகனத்திற்குள் கைவிலங்குடன் அவர் அமர்ந்திருக்கும் புகைப்படம் தொடர்பிலும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் உள்ளிட்ட பல தகவல்களை ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
https://www.youtube.com/embed/PCvCrpwvczw

