முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரஷ்ய எண்ணெய் கொள்முதலை நிறுத்தும் இந்தியா: ட்ரம்புக்கு வழங்கிய வாக்குறுதி

ரஷ்ய (Russia) எண்ணெய் கொள்முதலை இந்தாண்டு இறுதிக்குள் நிறுத்துவதாக இந்திய (India) பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார் என அமெரிக்க (United States) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டேவுடன் ஆலோசனை கூட்டமொன்று நடைபெற்றுள்ளது.

இதையடுத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நீண்ட செயல்முறை

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ரஷ்ய எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதாக இந்தியா என்னிடம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய எண்ணெய் கொள்முதலை நிறுத்தும் இந்தியா: ட்ரம்புக்கு வழங்கிய வாக்குறுதி | India To End Russian Oil Imports By Year End Trump

இது ஒரு நீண்ட செயல்முறை மற்றும் உடனடியாக நிறுத்த முடியாது.

நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசியதன் அடிப்படையில், இந்தாண்டு இறுதிக்குள் ரஷ்ய எண்ணெய் கொள்முதலை முற்றிலும் நிறுத்துவார்கள்.

இது மிகப்பெரிய விஷயம், கிட்டத்திட்ட 40 சதவீதம் எண்ணெய் கொள்முதலை இந்தியா செய்கின்றது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இருப்பினும், இதுதொடர்பாக இந்தியா தரப்பில் இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய எண்ணெய் கொள்முதலை நிறுத்தும் இந்தியா: ட்ரம்புக்கு வழங்கிய வாக்குறுதி | India To End Russian Oil Imports By Year End Trump

கடந்த வாரம் மோடியுடன் பேசியதாகவும் மற்றும் ரஷ்ய எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்தப் போவதாகவும் ட்ரம்ப் அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இருப்பினும், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், மோடியுடன் ட்ரம்ப் உரையாடியது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்திருந்தார்.

ரஷ்ய எண்ணெய்

இதையடுத்து, மோடியுடன் பேசியதாக ட்ரம்ப் தெரிவித்ததை இந்தியா மறுத்தது தொடர்பாக ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “அவர்கள் அப்படி தெரிவித்திருந்தால் கூடுதல் வரியைச் செலுத்த வேண்டியிருக்கும்.

ரஷ்ய எண்ணெய் கொள்முதலை நிறுத்தும் இந்தியா: ட்ரம்புக்கு வழங்கிய வாக்குறுதி | India To End Russian Oil Imports By Year End Trump

அவர்கள் அப்படிச் சொன்னதாக நான் நம்பவில்லை, நான் மோடியுடன் பேசினேன்.

ரஷ்ய எண்ணெய்யை வாங்கப் போவதில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்