முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எனது கணவனை கொலை செய்ய முயற்சி.. நீதி கேட்கும் யாழை சேர்ந்த பெண்

பளையினை சேர்ந்த நபர் ஒருவர் தனது கணவனை கொலை செய்ய முயற்சி செய்து வருவதாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த பெண் தெரிவிக்கையில்,

கடந்த 19ஆம் திகதி செம்பியன்பற்று வடக்கு கடற்கரை பகுதிக்கு எனது கணவன்
சென்றுகொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து எனக்கு அழைப்பு ஒன்று வந்தது.

மோசமான வார்த்தைகள்

அதில் எனது கணவன் விபத்துக்குள்ளாகி உள்ளார் என்று தெரியவிக்கப்பட்டது.
உடனடியாக விபத்து நடைபெற்ற இடத்திற்கு எனது மகள் சென்றார்.

விபத்து ஏற்பட்ட இடத்தில் எனது கணவனை கொலை செய்ய முயன்ற சந்தேகநபர் எனது மகளை
மோசமான வார்த்தைகளால் பேசிவிட்டு தந்தைக்கு பெரிய பிரச்சினை இல்லை என கூறி
அந்த இடத்தினை விட்டு விரட்டியுள்ளார்.

எனது கணவனை கொலை செய்ய முயற்சி.. நீதி கேட்கும் யாழை சேர்ந்த பெண் | A Woman From Jaffna Seeks Justice

பின்னர் எனது கணவனை கொலை செய்ய முயன்ற சந்தேகநபர், அவரது காரில் எறி எனது கணவனை நடு வீதியில் விட்டு விட்டு
சென்றுள்ளார்.  சுமார் அரை மணி நேரத்திற்கு பின்னரே எனது கணவனின் அண்ணனுடன் எனது கணவனை
சிகிச்சைக்காக வைத்தியசாலை அழைத்து சென்றேன். 

அதன் பின்னரே எனது கணவன் கண் விழித்து எனக்கு குறித்த தகவல்களை கூறினார். நான் விபத்துக்கு உள்ளான போது எனது காலில் சிறியளவு காயம்
மட்டுமே இருந்து.

குற்றச் செயல்கள்

பின்னர் சிறிது தூரத்திற்கு அப்பால் காரில் வந்த பளையினை
சேர்ந்த நபர் எனது காயப்பட்ட காலிற்கு மேல் பல தடவை காரால் ஏற்றினார் என அவர் எனக்கு கூறினார். இதற்கு பின்னரே இந்தச் சம்பவம் எனது கணவனை கொலை செய்வதற்காக
திட்டமிட்டு நடத்தப்பட்டது என தெரியவந்தது.

அதன் பின்னர் என் கணவனுடன்
விபத்துக்குள்ளான நபரை பார்த்த போது அவர் பல தடவை எனது வீட்டுக்கு முன்னால்
விபத்து நடைபெற்ற நாள் சென்றார் என தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ய சென்ற போது
முறைப்பாட்டினை அவர்கள் என்னிடம் பதிவு செய்யவில்லை.

எனது கணவனை கொலை செய்ய முயற்சி.. நீதி கேட்கும் யாழை சேர்ந்த பெண் | A Woman From Jaffna Seeks Justice

அத்துடன், நேற்றையதினம் (23.10.2025) எனது
கணவனிடன் பொலிஸ் வாக்கு மூலம் எடுக்க சென்று தாமாகவே வாக்குமூலம் எடுத்ததோடு
எனது கணவனின் எந்த விதமான முறைப்பாடுகளையும் பதிவு செய்யவில்லை. மேலும், எனது கணவனை கொலைசெய்ய முயன்ற பளையினை சேர்ந்த நபர் அவரை பார்வையிட
சென்று கடுந்தொனியில் மிரட்டியுள்ளார். மேலும், எனது உறவினர்களை வெட்டுவன் என கூறி
சென்றுள்ளார்.

இதற்கான ஆதாரங்களும் எம்முடம் உள்ளன. விபத்து இடம்பெற்ற நாளிலிருந்து இது வரை நானும் எனது இரு பெண் பிள்ளைகளும்
எமது வீட்டிற்கு செல்லவில்லை. எனது பிள்ளைகள் பாடசாலை செல்லவில்லை. எமக்கு குறித்த நபரால் பயம் ஏற்பட்டுள்ளது. அவர் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார். எமக்கு பளை பொலிஸ் முழுமையான ஆதரவை வழங்கி வருகிறது” எனக் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.