முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையின் கோல்டன் விசா திட்டம்: புலம்பெயர் முதலீட்டாளர்களுக்கு அடித்த அதிஷ்டம்

இலங்கை அரசு தனது நாட்டில் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கும் நோக்கத்தில் புதிய நீண்டகால குடியிருப்பு திட்டமான கோல்டன் விசா திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் வெளிநாட்டவர்கள் இலங்கையில் நீண்டகாலம் வாழவும், முதலீடு செய்யவும் மற்றும் கல்வி கற்கவும் அனுமதி பெற முடியுமென தெரிவிக்கப்படுகின்றது.

இந்த திட்டம் இலங்கையின் முதலீட்டாளர் விசா என்ற பிரிவின் கீழ் வருகின்றது.

முதலீட்டாளர்கள்

வெளிநாட்டு முதலீட்டாளர்கள், அவர்களின் துணைவர் மற்றும் சார்ந்த குழந்தைகள் அனைவரும் இந்த குடியிருப்பு விசாவுக்கு தகுதி பெற முடியும்.

விசா கட்டணம் வருடத்திற்கு 200 அமெரிக்க டொலர்கள் ஆகும் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் கோல்டன் விசா திட்டம்: புலம்பெயர் முதலீட்டாளர்களுக்கு அடித்த அதிஷ்டம் | Sri Lanka Long Term Golden Visa Application Ann

இது பிரதான விண்ணப்பதாரர், அவரது துணைவர் மற்றும் ஒவ்வொரு சார்ந்த நபருக்கும் தனித்தனியாக செலுத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்படுகின்றது.

இந்தநிலையில், ஐந்து ஆண்டு குடியிருப்பு விசா பெற குறைந்தபட்சமாக 100,000 டொலர் (சுமார் ரூபாய் 83 லட்சம்) முதலீடு செய்ய வேண்டும்.

குடியிருப்பு விசா

அத்துடன், பத்து ஆண்டு குடியிருப்பு விசா பெற 200,000 டொலர் (சுமார் ரூபாய் 1.66 கோடி) முதலீடு அவசியம் என குறிப்பிடப்படுகின்றது.

பத்து ஆண்டு கோல்டன் பரடைஸ் விசாவுக்கான கட்டணம் 2000 அமெரிக்க டொலர் ஆகும் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் கோல்டன் விசா திட்டம்: புலம்பெயர் முதலீட்டாளர்களுக்கு அடித்த அதிஷ்டம் | Sri Lanka Long Term Golden Visa Application Ann

முதலில் விண்ணப்பதாரருக்கு ஐந்து ஆண்டு காலத்திற்கு குடியிருப்பு அனுமதி வழங்கப்படும்.

இதையடுத்து, அவர் 200,000 டொலர் முதலீட்டை செய்திருப்பது உறுதி செய்யப்பட்டால், மேலும் ஐந்து ஆண்டுகள் வரை விசா நீட்டிக்கப்படும்.

அங்கீகரித்த திட்டங்கள் 

🛑 முதலீடு செய்யக்கூடிய துறைகள்

  1. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் அரசு அங்கீகரித்த திட்டங்களில் பணத்தை முதலீடு செய்யலாம்.
  2. இதில் முக்கியமானவை
    சொத்துகள் வாங்குதல் அல்லது குத்தகைக்கு எடுப்பது.
  3. இலங்கையில் புதிய வணிகம் தொடங்குதல்.
  4. இலங்கை நிறுவனங்களில் குறைந்தபட்சம் பத்து வீத வாக்குரிமை பங்குகள் வாங்குதல்.
  5. இலங்கை அரசாங்கம் அல்லது மத்திய வங்கி வெளியிடும் பத்திரங்கள் மற்றும் கடன் ஆவணங்களில் முதலீடு செய்தல்.

இலங்கையின் கோல்டன் விசா திட்டம்: புலம்பெயர் முதலீட்டாளர்களுக்கு அடித்த அதிஷ்டம் | Sri Lanka Long Term Golden Visa Application Ann

முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் முன் இலங்கையின் எந்தவொரு உரிமம் பெற்ற வணிக வங்கியிலும் முதலீடு கணக்கு மற்றும் விசா வெளிநாட்டு கரன்சி என்ற வங்கி கணக்குகளைத் திறக்க வேண்டும்.

இதன் மூலம் பணம் சட்டப்படி இலங்கைக்கு வரவழைக்கப்பட்டு முதலீடாகப் பயன்படும்.

இந்த விசா திட்டம் முதலீட்டாளர்களுக்கு மட்டுமல்லாது, அவர்களின் குடும்பத்தினருக்கும் நீண்டகால குடியிருப்பு வாய்ப்பை அளிக்கின்றது.

வெளிநாட்டு நிதி

🛑 இலங்கையின் நோக்கம்

அவர்கள் இலங்கையில் கல்வி கற்கவும், தொழில்கள் நடத்தவும் மற்றும் நாட்டில் சட்டப்படி வாழவும் முடியும்.

இலங்கை தற்போது வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க கடுமையாக முயற்சி செய்கின்றது.

இலங்கையின் கோல்டன் விசா திட்டம்: புலம்பெயர் முதலீட்டாளர்களுக்கு அடித்த அதிஷ்டம் | Sri Lanka Long Term Golden Visa Application Ann

குறிப்பாக சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம் மற்றும் கட்டுமானம் போன்ற துறைகளில் வெளிநாட்டு நிதி வருகையை அதிகரிப்பது அதன் முக்கிய நோக்கம்.

கோல்டன் தங்கும் விசா திட்டம் அதன் ஒரு பகுதியாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய குடியிருப்பு 

இலங்கையின் இந்த புதிய திட்டம், மால்டா, போர்ச்சுக்கல் மற்றும் துபாய் போன்ற நாடுகளில் தற்போது நடைமுறையில் உள்ள கோல்டன் விசா திட்டங்களைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இலங்கை, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஆசியாவில் ஒரு புதிய குடியிருப்பு மற்றும் முதலீட்டு தளமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையின் கோல்டன் விசா திட்டம்: புலம்பெயர் முதலீட்டாளர்களுக்கு அடித்த அதிஷ்டம் | Sri Lanka Long Term Golden Visa Application Ann

இந்த திட்டம் மூலம் வெளிநாட்டவர்கள் தங்கள் குடும்பத்துடன் இலங்கையில் குடியேறி, வணிகம் நடத்தி, கல்வி கற்கும் வசதியையும் பெற முடியும்.

அதேசமயம், இலங்கை பொருளாதாரத்திற்கும் இது புதிய உயிர் ஊட்டமாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.