பாடசாலை மாணவர்கள் ஐவர் மரண தண்டனைக் கைதிகளாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பான தகவல்களை சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க வெளியிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் தகவல் தருகையில், தற்போதைக்கு பதின்ம வயது இளைஞர்கள் ஐவர் மரண தண்டனைக் குற்றவாளிகளாத் தீர்ப்பளிக்கப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மரண தண்டனை
நாட்டில் மரண தண்டனை நடைமுறையில் இல்லாத காரணத்தினால் மரண தண்டனைக் கைதிகள் பெரும்பாலும் சிறைச்சாலைகளில் இயற்கையாக மரணம் எய்தும்வரை தடுத்து வைக்கப்படும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

அதன் பிரகாரம் பல்வேறு குற்றச் செயல்களின் காரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்ட 805 பேர் தற்போதைக்கு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 21 பெண்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஐவர் ஆகியோரும் உள்ளடங்கியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

