யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்கு (Divisional Secretariat Jaffna) புதிய பிரதேச செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, யாழ்ப்பாண பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக சிவகாமி உமாகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய பிரதேச செயலாளர் இன்றையதினம் (27.10.2025) அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் தமக்கான நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டார்.
கடமையினைப் பொறுப்பேற்றல்
இவர் கடந்த 2019.4.12 தொடக்கம் 2025.10.24 வரை கடந்த ஆறு வருட காலமாக கரவெட்டி பிரதேச செயலகத்தின் உதவிப்
பிரதேச செயலாளராக கடமையாற்றியுள்ளார்.

இந்தநிலையில் இன்றையதினம் (27.10.2025) யாழ்ப்பாண பிரதேச
செயலகத்தில் தனது கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

