முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

செவ்வந்திக்கு உதவிய முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்..! ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தகவல்

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் குற்றவாளியான இஷாரா செவ்வந்திக்கு உதவி புரிந்தமை தொடர்பான விசாரணையை முன்னெடுக்கும் வகையில், கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் 02 விசேட குழுக்கள் வடக்கு மாகாணத்தில் செயற்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த குழுக்கள் சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, இஷாரா செவ்வந்தி நாட்டில் தலைமறைவாகியிருக்கவும், தப்பிச் செல்லவும் உதவியமை தொடர்பான விசாரணைகளுக்காக 04 குழுக்கள் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருகின்றதாக குறிப்பிடப்படுகின்றது.

இஷாராவை இந்தியாவுக்கு அனுப்பியவர்

அத்துடன், இஷாராவை இந்தியாவுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் ஆனந்தன் என்பவரின் வீட்டிலிருந்து துப்பாக்கிகளும், ரவைகளும் மீட்கப்பட்டமை தொடர்பில் வவுனியாவில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

செவ்வந்திக்கு உதவிய முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்..! ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தகவல் | 2 Groups Investigation Into Ishara S Assistance

வவுனியாவைச் சேர்ந்த 45 வயதான வர்த்தகர் ஒருவரே கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் அவர் முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்

எனினும், ஆனந்தனிடம் வழங்கிய துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் எங்கிருந்து கிடைத்தது என்பது தொடர்பில் குறித்த வர்த்தகர் எவ்வித தகவல்களையும் இதுவரை வெளிப்படுத்தவில்லை என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

செவ்வந்திக்கு உதவிய முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்..! ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தகவல் | 2 Groups Investigation Into Ishara S Assistance

இந்த நிலையில் இஷாராவிற்கு ஒத்துழைப்பு வழங்கியமை தொடர்பில் இதுவரையில் 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் 07 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய 03 பேரும் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்