கணேமுல்ல சஞ்சீவ (Ganemulla Sanjeeva) படுகொலைக்கு மூளையாக செயற்பட்ட இஷாரா செவ்வந்திக்கு உதவியதாக பெண் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை இன்று (28) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடவத்த பகுதியில் வைத்து குறித்த பெண் சட்டத்தரணி கைது செய்யப்பட்டுள்ளார்.“
சஞ்சீவ படுகொலை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்வதற்கு பயன்படுத்திய துப்பாக்கியை மறைப்பதற்காக அவர் இஷாரா செவ்வந்திக்கு உதவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கணேமுல்ல சஞ்சீவ படுகொலையில், மூளையாக செயற்பட்டவராக அடையாளம் காணப்பட்ட இஷார செவ்வந்தி, குறித்த படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிக்கு துப்பாக்கியை எடுத்து சென்று வழங்கியதாக வலைவீசி தேடப்பட்டார்.
நேபாளத்தில் கைது
இதையடுத்து அவர் அவர் மாலைத்தீவுக்குத் (Maldives) தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், எட்டு மாதங்களுக்குப் பிறகு நேபாளத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில், இஷாரா செவ்வந்தி நாட்டில் தலைமறைவாகியிருக்கவும் மற்றும் தப்பிச் செல்லவும் உதவியமை தொடர்பான விசாரணைகளுக்காக நான்கு குழுக்கள் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருகின்றன.
நீதிமன்ற உத்தரவு
இதனடிப்படையில், இஷாரா செவ்வந்திக்கு ஒத்துழைப்பு வழங்கியமை தொடர்பில் இதுவரையில் பத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் ஏழு பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய மூன்று பேரும் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த பிண்ணனியில் தற்போது ஒரு பெண் சட்டத்தரணி இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

