2025ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி ஊடக விருதுகள் வழங்கும் நிகழ்வு, எதிர்வரும்
நவம்பர் 11ஆம் திகதி கொழும்பு நெலும் பொகுன மஹிந்த ராஜபக்ச அரங்கில் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
நாட்டில் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக கலாசாரத்தை வளர்ப்பதில் இலங்கை
ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக வல்லுநர்களின் பங்களிப்பை அங்கீகரித்து
பாராட்டுவதை இந்த விருது வழங்கும் நிகழ்வு நோக்கமாகக் கொண்டுள்ளது.
சிறந்து விளங்குவோரை ஊக்குவிக்கும்
இந்த விருதுகள் அச்சு, இலத்திரனியல் மற்றும் டிஜிட்டல் ஊடக தளங்களில் சிறந்து
விளங்குவோரை ஊக்குவிக்கும் அதேவேளை பொறுப்பான ஊடகவியலை வலுப்படுத்துவதற்கான
அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடக விருதுகள் ஊடகத் துறையில் நேர்மை, படைப்பாற்றல் மற்றும்
நிபுணத்துவத்தை வெளிப்படுத்தியவர்களை கௌரவிக்கும் மற்றும் செய்தியாளர்களின்
சிறப்பைக் கொண்டாடும் முக்கிய தேசிய நிகழ்வுகளில் ஒன்றாக அமையும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

