பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை முன் வீதி முற்றுமுழுதாக கனரக வாகனங்கள்
செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம்(29) பருத்தித்துறை பிரதேச சபையில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கட்டுப்பாடுகள்
அத்தோடு, பாடசாலை நேரங்களில் மாணவர்கள்
பாடசாலை செல்லும் மற்றும் வெளியேறும் நேரங்களில் கனரக வாகனங்கள் செல்வதற்கு
நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்ட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வடமராட்சி கிழக்கு உடுத்துறை
மற்றும் ஆழியவளை பகுதிகளில் அனுமதியின் அமைக்கப்பட்டுள்ள அலைக்கதிர் ஊக்கி
newswork booster கோபுரங்கள் அமைப்பதை நிறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

