யாழ்ப்பாணத்தில் (Jaffna) சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெல்லிப்பழை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
17 வயதுடைய சதிஷ்குமார் சயோசியன் என்ற சிறுவனே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் – மல்லாகம், நரியிட்டான் பகுதியில் வசித்து வந்த குறித்த இளைஞன்
31.10.2025 வெள்ளிக்கிழமை
வீட்டைவிட்டு சென்றிருந்தார்.
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
குறித்த சிறுவன் வீடு திரும்பாத நிலையில் அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

அத்துடன் சிறுவன் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் பெற்றோர் அல்லது தெல்லிப்பழை காவல்துறையினருக்கு
தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

