முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புதுக்குடியிருப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ள புதிய அணைக்கட்டு

உலக வங்கியின் 41 மில்லியன் ரூபா நிதி உதவியில் புதுக்குடியிருப்பு கமநல சேவை
திணைக்களத்தின் கீழ் மல்லிகைத்தீவு கிராமத்தில் பேராற்றினை மறித்த கட்டிய
குன்றுப்பள்ளாறு என்ற அணைக்கட்டு திறப்பு நிகழ்வு நேற்று (01.11.2025)
நடைபெற்றுள்ளது.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இலங்கைக்கான உலக வங்கியின் பிரதிநிதி
வைத்தியர் சேகு (DR.Sehu)அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளதுடன் சியாப்
திட்டப்பணிப்பாளர் சமன்பந்துல புதுக்குடியிருப்பு உதவி பிரதேச செயலாளர் கமநல
சேவைத்திணைக்கள அதிகாரிகள், சியாப்திட்ட உத்தியோகத்தர்கள் மற்றும்
பொறியியலாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

முத்தையன் கட்டு குளத்தின் கீழான பேராறு கழிவு நீர்ஆனது கடந்த காலங்களில்
நந்திக்கடலில் கலந்து அது முல்லைத்தீவு கடலுடன் செல்கின்ற நிலையில் இந்த கழிவு
நீரினை மறித்து விவசாயம் செய்யும் நோக்கில் விவசாயிகளால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 

முன்வைக்கப்பட்ட கோரிக்கை 

இதற்கு அமைவாக புதுக்குடியிருப்பு கமநலசேவைத் திணைக்களத்தின் கீழ் உள்ள
பகுதிகளில் ஆறு இடங்களில் இவ்வாறான அணைக்கட்டுக்கள் கட்டப்பட்டு இருபோகங்கள்
விவசாய செய்கையினை மேற்கொள்ளக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ள புதிய அணைக்கட்டு | New Dam Inaugurated In Batticaloa

கடந்த காலங்களில் மழையினை நம்பியே காலபோக நெற்செய்கையினை விவாசாயிகள்
மேற்கொண்டு வந்துள்ளார்கள்.
இந்த ஆறு அணைக்கட்டிற்குமான நிதியினை உலக வங்கி சுமார் 260 மில்லியன் ரூபா
நிதியில் சியாப் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆண்டுதோறும் பேராறு எனப்படும் ஆறு ஊடகா அதிகளவான மழைநீர் மற்றும் கழிவு நீர்
கடலினை சென்றடைந்து வருகின்றது இவ்வாறு கழிவு நீரினை வீண்விரையம் செய்யாது
அதனை விவசாய செய்கைக்கு பயன்படுத்தி விவசாய வளர்ச்சிக்கு இந்த அணைக்கட்டுக்கள்
உறுதுணையாக அமைந்துள்ளன.

புதுக்குடியிருப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ள புதிய அணைக்கட்டு | New Dam Inaugurated In Batticaloa

பேராற்றினை மறித்து ஆறு இடங்களில் அணைக்கட்டுக்கள் கட்டப்பட்டு வருகின்றன
இவ்வாறு கட்டப்பட்டு வரும் அணைக்கட்டுக்களில் ஒன்றான குன்றுப்பள்ளாறு
எனப்படும் அணைக்கட்டு கட்டி முடிக்கப்பட்ட நிலையில் நேற்று (01)
திறந்துவைக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு கமநலசேவைத்திணைக்களத்தின் கீழ் இவ்வாறு உலக வங்கி நிதி
உதவியுடன் அமைக்கப்பட்டு வருகின்ற ஆறு அணைக்கட்டுகளுக்கு கீழும் சிறுபோக
விவாசாய செய்கைக்காக சுமார் 1800 ஏக்கர் வரை விவசாய செய்யை மேற்கொள்ளப்படும்
2000ஆயிரம் விவசாயிகளக் நன்மைஅடையக்கூடியவகையிலும் இது அமைந்துள்ளது.

இந்த திட்டத்திற் முழுமையான நிதியினை வழங்கிய உலக வங்கிக்கும் ஏனைய அரச
திணைக்களத்திற்கும் விவசாயிகள் நன்றியினை தெரிவித்துள்ளார்கள்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.